மதுரை:மதுரை இளைஞர் ராஜாராமன், கனடா நாட்டின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பு வழங்கும் 2015ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனருக்கான சர்வதேச விருதை பெற்றுள்ளார்.
சென்னை 'இன்போசிஸ்' நிறுவனத்தில் நுட்ப ஆய்வாளராக பணியாற்றும் இவர், 'நீச்சல்காரன்' என்ற பெயரில் இணைய வலைப்பூவில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். இவ்விருதை பெறும் முதல் இந்தியத் தமிழர் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன், 3 ஆண்டு
களுக்கு முன் 'நாவி' என்ற சந்திப் பிழை திருத்தியை உருவாக்கி, எனது 'நீச்சல்காரன்' வலைப் பூவில் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வெளியிட்டேன். இப்போது, 'வாணி' என்ற தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியுள்ளேன். இது 300க்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்களையும் கண்டறிந்து, அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை காட்டும்.
சென்னை கணித்தமிழ் பேரவையுடன் இணைந்து பல்வேறு தமிழ் இணைய வளர்ச்சி பணிகளில் ஈடுபடுகிறேன். முதன்முதலாக இணைய தமிழ் பிழை திருத்தியை நான் உருவாக்கியிருந் தாலும், பலரது முயற்சியால்தான் கணித்தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது. மதுரைக்கு என்னால் முடிந்த பெருமையை தேடி கொடுத்துள்ளேன். இவ்விருதுடன் வழங்கிய ரொக்கப் பரிசை 'ஹார்வர்ட்' பல்கலையில் துவங்கவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்கி விட்டேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE