பொது செய்தி

தமிழ்நாடு

புதிய அங்கன்வாடி கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Added : ஜூலை 06, 2016
Share
Advertisement

உடுமலை :உடுமலை, ரெட்டிபாளையத்தில் குழந்தைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை ஒன்றியம் எரிசினம்பட்டியை அடுத்துள்ள ரெட்டிபாளையத்தில், துவக்கப்பள்ளியின் அருகில் குழந்தைகளுக்கான புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த ஊராட்சியில், துவக்கப்பள்ளியின் அருகிலுள்ள ஒரு ஓட்டுக்கட்டடத்தில் அங்கன்வாடி இயங்கி வருகிறது. தற்போது அங்கு பத்து குழந்தைகள் படிக்கின்றனர்.
ஒரு சிறிய அறை மட்டுமே அங்கு உள்ளது. அந்த அறையிலேய குழந்தைகளை வைத்து பராமரித்துக்கொள்வதும், அவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணிகளும் நடக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வைத்து விளையாடவும் இடமில்லாத நிலையே உள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர், அரசின் சார்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கின.ஓராண்டைக் கடந்தும் கட்டடம் பயன்பாட்டுக்கு வராததால், பெற்றோர் வேதனையடைந்துள்ளனர்.
சுற்றுச்சுவர் இல்லை:தற்போதுள்ள அங்கன்வாடியில் சுற்றுச்சுவர் இல்லை. அதன் பின்புறம் புதர்போல செடிகள் வளர்ந்துள்ளன. அங்கன்வாடி அறையிலுள்ள திட்டுகள் இடிந்து மண் சரிவது தொடர்கிறது. இவ்வாறே உள்ளது தற்போதுள்ள அங்கன்வாடி. அந்த ஊராட்சியில் விவசாயம் மற்றும் கூலித் தொழில் செய்வோரே பெரும்பான்மையாக இருப்பதால், பொருளாதார வசதியில்லாத சூழலில் குழந்தைகளை அங்கன்வாடிகளை நம்பி அனுப்புகின்றனர். இவ்வாறு சிதிலமடைந்த அடிப்படை வசதியே இல்லாத நிலையிலும் வேறு வழியின்றி குழந்தைகளை அங்கு அனுப்ப வேண்டியுள்ளதாக அதிருப்தியடைந்துள்ளனர் பெற்றோர். இக்கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X