தஞ்சாவூர்:'திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் கறுப்பு பணம் என்பதும், அது யாருக்கு சொந்தமானது என்பதும், சி.பி.ஐ., விசார ணையில் வெளிச்சத்துக்கு வரும்' என, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில், நேற்று நடந்த தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார்.
திருமணத்தை நடத்தி வைத்து, அவர் பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் என்றே எல்லாரும் எதிர்பார்த்தனர்; அது நிறைவேற வில்லை. ஆனாலும், சோர்ந்து உட்கர்ந்து விட வில்லை.
வெற்றி பெற்றவர் களுக்கு, அவர்கள் எப்படி வெற்றி பெற்றனர் என்பது தெரியும். அதனால், அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதும் தெரியும்.
இப்போது, 89 எம்.எல்.ஏ.,க்களுடன் இருக்கிறோம். இதுவரை,தமிழகத்தில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சி இருந்தது இல்லை.
தேர்தல், கடந்த மே, 16ம் தேதி நடந்தது; ஓட்டு எண்ணிக்கை, 19ம் தேதி நடந்தது. ஆனால், 13ம் தேதி திருப்பூரில், மூன்று கன்டெய்னர் லாரி களில், 570 கோடி ரூபாய் பிடிபட்டதாக செய்தி வருகிறது. அதில், 5,000 கோடி ரூபாய் இருந்ததாகவும் சொல்கின்றனர்.
அந்த பணம் யாருடையது என தெரியவில்லை என்கிற நிலையில், லாரி பிடிபட்டு, 18 மணி நேரம் கழித்து, ரிசர்வ் வங்கி பணம் என தகவல் வருகிறது. அங்குதான் ரகசியம் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, இந்த பணம்குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, பிரதமர் மோடியிடம், தி.மு.க.,
தரப்பில் வலியுறுத்தப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. பிறகு, சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில், 'சி.பி.ஐ., விசாரிக்க
வேண்டும்' என, உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இன்னும், மூன்று
மாதத்தில் பிடிபட்ட பணம் யாருடையது என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். மே,
19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை; 13ம் தேதி இங்கிருந்து பணம் போகிறது என்றால்,
தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டால், பணத்தை பறிமுதல் செய்து விடுவர் என்ற பயம். அதன் காரணமாக, தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது, சி.பி.ஐ.., விசாரணையில் நிச்சயம் தெரியவரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (47)
Reply
Reply
Reply