பொது செய்தி

தமிழ்நாடு

கழிவறை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராமம்

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (7)
Advertisement
கழிவறை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராமம்

மதுரை: கேரளாவில் கிராமம் ஒன்றில், கழிவறையிலிருந்து வெளியேறும் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகேயுள்ள புலுவிலா என்ற கிராமத்தில் உலகின் முதல் மின்னணு கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிக்கும் பணியும் நடக்கிறது. இந்த திட்டத்திற்கு, பில்கேட்ஸ் மிலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியை பயன்படுத்தி ஈரம் அறிவியல் அமைப்பு உதவி செய்து வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவில் தெற்கு புளோரிடா பல்கலை செய்து வருகிறது. இந்த டாய்லட்டில், மின்னணு, மெகானிக்கல், இணையதள மொபைல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கழிப்பறைக்கு செல்லுதல், பயன்படுத்துவது, தூய்மைப்படுத்துவது, வெளியேறுவது ஆகியவை கட்டுபடுத்தப்படுகின்றன. இந்த டாய்லட் ரிமோட் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அங்குள்ள நியூஜென் என்ற இயந்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு, உரம் தயாரிப்பு ஆகியவை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandh - Vellore ,இந்தியா
08-ஜூலை-201612:50:37 IST Report Abuse
Anandh நல்ல திட்டம்.
Rate this:
Share this comment
Cancel
suganya - tirupur,இந்தியா
07-ஜூலை-201621:03:22 IST Report Abuse
suganya நம்ம தமிழ் நாட்டில் தான் அதிகம் மின்சாரம் பற்றாக்குறை. இந்த தொழில் நுட்பத்தை நம் தமிழ்நாட்டிலும் பின் பற்றலாம் ....... :)
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
07-ஜூலை-201619:17:53 IST Report Abuse
Raj Pu வெளிநாட்டு நிதி உதவி மதம் மாற முயற்சி என்று திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடாதிருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X