பொது செய்தி

இந்தியா

முல்லைப்பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும்: மூவர் குழு தலைவர்

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (6)
Share
Advertisement
குமுளி: முல்லைப்பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளது. எந்த வெள்ளத்தையும் தாங்கும் என மூவர் குழு தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை கூறினார். முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் கண்காணிப்பு குழு, இன்று அணையை ஆய்வு செய்தது. மூவர் கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அணையின் நீர்மட்ட உயர்வு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
முல்லைப்பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும்: மூவர் குழு தலைவர்

குமுளி: முல்லைப்பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளது. எந்த வெள்ளத்தையும் தாங்கும் என மூவர் குழு தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை கூறினார்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் கண்காணிப்பு குழு, இன்று அணையை ஆய்வு செய்தது. மூவர் கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அணையின் நீர்மட்ட உயர்வு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு செய்யப்பட்டது.. தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் பிரபாகரன், கேரள அரசின் சார்பில் குரியன் பங்கேற்றனர். பின்னர் மூவர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதனை தொடர்ந்து மூவர் குழு தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை கூறுகையில், முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதால் எந்த வெள்ளத்தையும் தாங்கும். கேரள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளும் பலமாக உள்ளன. அணை உறுதியாகவம் பாதுகாப்பாகவும் உள்ளது. நீர்கசிவு பகுதி, பேபி அணை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அறிக்கையை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிப்போம் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-ஜூலை-201606:55:19 IST Report Abuse
K.Sugavanam பிள்ளைஜி சொல்லி என்ன பயன்..கேரளா இன்னொரு டாம்-2 sequel ஐ வெளியிடும் விரைவில். வெள்ளி, சின்ன திரைகளில் காணலாம்..இலவசமாக..அதற்குள் நாம் DAM _-1 ஐ வெளியிட்டு அவர்களின் வசூலை குறைத்து விடலாம்..
Rate this:
Cancel
Proud Indian - kumari2kashmir,இந்தியா
08-ஜூலை-201601:47:48 IST Report Abuse
Proud Indian 1897 - 1906 ல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணையைக் கட்டியதும் வெள்ளைக்கார பொறியாளர் மிஞ்சின். அவரை மக்கள் மூக்கன் துரை என்றே அழைத்தனர். அவருடைய சமாதியும் அணைக்கரையிலேயே உள்ளது. இன்றும் உறுதியாக கம்பீரமாக நிற்கிறது. நீங்க ஆராய வேண்டியது எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் கட்டிய பாலங்களையும், போட்ட ரோடுகளையும் தான்.
Rate this:
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-201620:25:53 IST Report Abuse
Indian இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கேரள தொழிலதிபர்களின் ஆக்கிரமிப்பை காப்பாற்றவே கேரள அரசு நடத்தும் நாடகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X