முக்கிய இடங்களை சுத்தப்படுத்த அரசு முடிவு

Updated : ஜூலை 08, 2016 | Added : ஜூலை 08, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் முக்கியமான 10 சுற்றுலா தலங்களை தூய்மை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த தலங்களை தூய்மை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 100 வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புராதான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
முக்கிய இடங்களை சுத்தப்படுத்த அரசு முடிவு

புதுடில்லி : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் முக்கியமான 10 சுற்றுலா தலங்களை தூய்மை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த தலங்களை தூய்மை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 100 வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புராதான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த தூய்மை செய்யும் பணிகள் நடக்க உள்ளது. இந்த இடங்களில் சுத்தம், குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
முதல்கட்டமாக தூய்மை செய்வதற்காக காஷ்மீர் - வைஷ்ணவ தேவி கோயில், உ.பி., - தாஜ் மஹால், ஆந்திரா - திருப்பதி, பஞ்சாப் - பொற்கோயில், ராஜஸ்தான் - அஜ்மர் ஷெரீப், ஒடிசா - ஜெகந்நாதர் ஆலயம், மகாராஷ்டிரா - சத்ரபதி சிவாஜி நினைவிடம், உ.பி., - மணிகர்னிகா காட், தமிழகம் - மதுரை மீனாட்சி கோயில், அசாம் - கமக்யா ஆலயம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் தூய்மை பணிகள் முடிவடைந்ததும், மீதமுள்ள 90 இடங்கள் தூய்மை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
08-ஜூலை-201622:01:14 IST Report Abuse
Sambasivam Chinnakkannu தூய்மை செய்வதோடு அல்லாமல் ................தொடர்ந்து பராமரிக்க .பராமரிப்பை கவனிக்க , இல்லை என்றால் அசுத்தப்படுத்தும் நபர்களை ,நிறுவனத்தை தண்டிக்க அமைப்பு வேண்டும் ..........
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
08-ஜூலை-201621:09:38 IST Report Abuse
Sivagiri தமிழக அரசும் இப்பிடி அதிரடியாக முதல்கட்டமாக பத்து அரசு ஆஸ்பத்திரிகளை - பத்து அரசு பள்ளிகளை - சுத்தப் படுத்தி அதிநவீனப்படுத்தி மக்களுக்கு / மாணவர்களுக்கு வசதி பண்ணி கொடுக்கலாம் . . .
Rate this:
Cancel
Bala - Chennai,இந்தியா
08-ஜூலை-201619:15:15 IST Report Abuse
Bala தூய்மை இந்தியா திட்டத்தையும் மோடியையும் பலர் அவதூறு பேசுகிறார்கள். மோடியேவா தினமும் அனைத்து இடங்களிலும் சுத்த படுத்த முடியும்? நம் கையில் தான் இருக்கிறது இந்த திட்டத்தின் வெற்றி. நாம் தான் கட்டுப்பாடுடன் பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் பேணவேண்டும். வேண்டுமானால் சட்டம் போடலாம், அதனால் என்ன பயன்? பெரும்பான்மையானோர் ஒழுங்கீனமாக நடந்தால் அனைவரையும் சட்டப்படி தண்டிக்கமுடியுமா? சுயக்கட்டுப்பாடு வேண்டும். வெளிநாடுகளில் சுத்தத்தை பற்றி பேசும் நம்மில் பெரும்பான்மையோர் அங்கே ஒழுங்கையும் இங்கே ஒழுங்கீனத்தையும் கடைப்பிடிப்பவர்களாகவே உள்ளனர். சிறு துளி பெரு வெள்ளம் போல இதை போன்ற முயற்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றால் சுத்தம் சாத்தியமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X