புதுடில்லி : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் முக்கியமான 10 சுற்றுலா தலங்களை தூய்மை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த தலங்களை தூய்மை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 100 வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புராதான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த தூய்மை செய்யும் பணிகள் நடக்க உள்ளது. இந்த இடங்களில் சுத்தம், குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
முதல்கட்டமாக தூய்மை செய்வதற்காக காஷ்மீர் - வைஷ்ணவ தேவி கோயில், உ.பி., - தாஜ் மஹால், ஆந்திரா - திருப்பதி, பஞ்சாப் - பொற்கோயில், ராஜஸ்தான் - அஜ்மர் ஷெரீப், ஒடிசா - ஜெகந்நாதர் ஆலயம், மகாராஷ்டிரா - சத்ரபதி சிவாஜி நினைவிடம், உ.பி., - மணிகர்னிகா காட், தமிழகம் - மதுரை மீனாட்சி கோயில், அசாம் - கமக்யா ஆலயம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் தூய்மை பணிகள் முடிவடைந்ததும், மீதமுள்ள 90 இடங்கள் தூய்மை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE