மும்பை: டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல என மும்பையை சேர்ந்த முஸ்லிம் மத குரு ஜாகீர் நாயக் கூறியுள்ளார்.
சமீபத்திய வங்கதேச தாக்குலில் ஈடுபட்ட ஒருவர் ஜாகீர் நாயக் பேச்சு எனது மனதை மாற்றியது என கூறியிருந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாக திக் விஜயசிங் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார்.
மேலும் ஜாகீர் நாயக் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயங்கரவாத விஷயத்தில் எந்தவொரு சமரசத்திற்கும் வர மாட்டோம் என எச்சரித்திருந்தார். ஜாகிர் பேச்சு குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ஜாகீர் நாயக் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ; எனக்கும் வங்க தேச தாக்குதலுக்கும் எவ்வித தொர்பும் இல்லை. மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றன.
ஜாகீர் நாயக் பொறுப்பு வகிக்கும் அமைப்பின் லைசென்ஸ் மற்றும் இந்த அமைப்பிற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.