வேகத்தடை அமைக்க ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூலை 08, 2016 | Added : ஜூலை 08, 2016 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: மாநிலத்தில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இதன்படி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், அருகே வேகத்தடை அமைப்பது உறுதிப்படுத்த வேண்டும். மேலும் சென்னையில் உடனடியாக வேகத்தடை அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி
வேகத்தைடை அமைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாநிலத்தில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இதன்படி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், அருகே வேகத்தடை அமைப்பது உறுதிப்படுத்த வேண்டும். மேலும் சென்னையில் உடனடியாக வேகத்தடை அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிக்கையை வரும் 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasu Murari - Chennai,இந்தியா
09-ஜூலை-201602:28:37 IST Report Abuse
Vasu Murari வேகத் தடைகளே விபத்துக்கள் ஏற்படுத்தும் காரணியாக இருந்து விடக்கூடாது என்றதொரு விஷயத்தையும் கனம் கோர்ட்டார் அவர்கள் உத்தரவு பிறப்பிக்கலாம்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஜூலை-201622:30:38 IST Report Abuse
g.s,rajan பல வேகத்தடைகள் ஒட்டகத்தின் திமில் இருப்பத்தைப் போல மிக மிக உயரமாக மலை போல உள்ளது.பல வேகத்தடைகள் உரிய முன் எச்சரிக்கைப் பலகைகள் (Sign Boards) இல்லாமல் இருப்பது பல வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ,குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு மிகவும் ஆபத்து ,மேலும் பல வேகத்தடைகள் உரிய வெள்ளை நிற ஒளிரும் பட்டை இல்லாமல் இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது ,யாராவது சரி வர கவனிக்காமல் வேகத்தடைகள் மீது மோதினால் தூக்கி எறிந்துவிடும் ,இதனால் ஓட்டுனருக்கு கபால மோட்சம் தான் கிடைக்கும் பலர் தலைக்கவசம் அணிவதே இல்லை ,கிராமப்புறங்களில் பலர் தலைக்கவசம் அணியாமல் தான் வாகனத்தை ஓட்டுகின்றனர். ,தலைக்கவசம் போட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்து இருக்காது ஆனால் வாகனங்கள் சேதம் அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது .மேலும் இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெளிவாகத் தெரிய ஒளி பட்டால் பிரதிபலிக்கும் ரிஃப்ளெக்டர்கள் அமைக்க கட்டாயம் மீது நீதி மன்றங்கள் உத்தரவு இட வேண்டும்.மேலும் வேகத்தடைகள் அமைக்க சரியான நீளம் ,அகலம் ,உயரம் கட்டாயம் வரையறுக்கப் படவேண்டும் ,மேலும் அந்த வரைமுறையை எல்லா இடத்திலும் பின் பற்ற வலியுறுத்த வேண்டும் ,மேலும் ஆபத்தான முறையில் தமிழகத்தில் பல சாலைகளில் நகரங்களில் ,கிராமங்களில் ,தெருக்களில் அமைக்கப் பட்டு இருக்கும் வேகத்தடைகளை உடனடியாக அகற்றவும் நீதி மன்றம் அரசுக்கு விரைவாக ஆணை இடுமா ???இல்லையேல் பலருக்கு முதுகுத் தண்டுவடம் சில நாட்களில் கண்டிப்பாக காலியாகி விடும் ,மேலும் அது நிச்சயம் ஒருவரைப் பலவகையில் முடக்கிவிடும்.
Rate this:
Cancel
John I - Yanbu,சவுதி அரேபியா
08-ஜூலை-201621:32:15 IST Report Abuse
John I அப்படியே வேகத்தடைக்கு போடுகிற தாரையே ரோட்டுக்கும் போட சொல்லுங்க எஜமான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X