புதுடில்லி:சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 78 ஆக உயர்ந்தது; இதில், 72 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
டில்லியைச் சேர்ந்த ஜனநாயக மறுமலர்ச்சிக் கான சங்கம் என்ற அமைப்பு, அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள்:
* புதிய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு, 8.73 கோடி ரூபாய். ஒவ்வொரு அமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு, 12.94 கோடி ரூபாய்
* புதிய அமைச்சர்களில் மிகப் பெரும் பணக்காரரான எம்.ஜே. அக்பருடைய சொத்து மதிப்பு, 44.90 கோடி ரூபாய்
* மொத்த சொத்து மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்ளவர்கள், 9 பேர். இதில், 113 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
* அவருக்கு அடுத்த இடங்களில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், 108 கோடி ரூபாய், மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், 90 கோடி ரூபாய் சொத்து மதிப்பை அறிவித்து உள்ளனர்
* புதிய அமைச்சர்களில், ஏழு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதன்
மூலம், கிரிமினல் வழக்கு உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை, 24 ஆக
உயர்ந்துள்ளது
* அமைச்சர்களில் மூன்று பேர், 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 44 பேர், 41 முதல் 60
வயது பிரிவையும், 31 பேர், 61 முதல் 80 வயது பிரிவையும் சேர்ந்தவர்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (31)
Reply
Reply
Reply