அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வில் தொடரும் களை எடுப்பு

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (21)
Advertisement
திமுக.,வில் தொடரும் களை எடுப்பு

சென்னை : திமுக.,வில் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் நிர்வாகிகள் மாற்றம், நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்ட களையெடுப்புக்கள் நடந்து வருகிறது. கட்சியை பலப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று, வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ம.முத்தமிழ்ச் செல்வி வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடரலாம் என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUNKUMAR - Chennai,இந்தியா
15-ஜூலை-201614:13:24 IST Report Abuse
ARUNKUMAR கட்சிக்கு எதிராக நடந்துகொள்பவர்கள்மீது நடவடிக்கை, களையெடுப்பு தேவைதான். ஆனால், அதேநேரத்தில், ஸ்டாலினின் தலையீட்டால், அவருக்கு வேண்டாதவர்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
10-ஜூலை-201604:23:12 IST Report Abuse
Siva Kumar இப்படி களை எடுத்தால் கடைசியில் கட்சியில் முக மட்டும்தான் இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201600:52:08 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்படியே எடுத்துக் கிட்டு இருந்தால் திமுகவில் கருணாநிதி குடும்பமும், அதிமுகவில் ஜெயா சசி குடும்பமும் தான் மிஞ்சி நிற்கும். இரண்டு ஊழல் விருட்சங்களின் ஆணிவேர் ஆச்சே.. அதை வெட்டினால் தமிழகம் தழைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X