திமுக.,வில் தொடரும் களை எடுப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வில் தொடரும் களை எடுப்பு

Added : ஜூலை 09, 2016 | கருத்துகள் (21)
Share
திமுக.,வில் தொடரும் களை எடுப்பு

சென்னை : திமுக.,வில் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் நிர்வாகிகள் மாற்றம், நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்ட களையெடுப்புக்கள் நடந்து வருகிறது. கட்சியை பலப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று, வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ம.முத்தமிழ்ச் செல்வி வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடரலாம் என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X