பொது செய்தி

இந்தியா

இந்திய கடற்படை பெண் கேப்டனுக்கு ஐ.நா. வீர தீர விருது

Added : ஜூலை 10, 2016 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:கடலில் வீர தீரச் செயல் புரிவதற்காக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு அளிக்கும் விருதை முதல் முறையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண் கேப்டன் ராதிகா மேனன் பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ஒடிசா மாநிலம், கோபால்பூர் அருகே வங்காள விரிகுடா
 இந்திய கடற்படை பெண் கேப்டனுக்கு ஐ.நா. வீர தீர விருது

புதுடில்லி:கடலில் வீர தீரச் செயல் புரிவதற்காக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு அளிக்கும் விருதை முதல் முறையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண் கேப்டன் ராதிகா மேனன் பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ஒடிசா மாநிலம், கோபால்பூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி, மீனவர்கள் 7 பேர் சென்ற படகு மூழ்கியது. அந்த நேரத்தில், பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. எனினும், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்ட ராதிகா மேனன், அவர்களை மீட்க உடனடியாக உத்தரவிட்டார்.
அதன்படி, ராதிகா மேனன் தலைமையிலான மீட்புக் குழுவினர் 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். இதுபோன்று கடலில் வீர தீரச் செயலை புரிபவர்களுக்கு ஐ.நா.வின் உதவியுடன் லண்டனில் இயங்கி வரும் சர்வதேச கடல்சார் அமைப்பு ஆண்டுதோறும் விருது அளித்து வருகிறது.
இந்தாண்டில், அந்த விருதுக்காக ராதிகா மேனனின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்தாலோசனை நடத்தி, வீர தீர விருதுக்கு ராதிகா மேனனை தேர்வு செய்தனர். லண்டனில் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilkumar nagappan - chennai,இந்தியா
10-ஜூலை-201622:15:05 IST Report Abuse
senthilkumar nagappan போலித்தனமான பரிசு, உத்தரவு மட்டுமே கொடுத்தார் . ஆனால் கடலில் குதித்து மீனவரை காப்பாற்றிய கடை நிலை மாலுமிக்கு ?
Rate this:
Cancel
Kumar - Chennai,இந்தியா
10-ஜூலை-201607:47:59 IST Report Abuse
Kumar அப்பாடா எவ்வளவு பராக்கிரமம் நிறைந்த வீரச்செயல் புல்லரிக்கிறது. பாரத் ரத்னாவே கொடுக்கலாம். மத்திய அரசு சிபாரிசு செய்யலாமே
Rate this:
Cancel
pmrani - Delhi,இந்தியா
10-ஜூலை-201607:44:42 IST Report Abuse
pmrani பாராட்டப்பட வேண்டிய வீரர். தமிழர் அல்லாதோரை பாராட்ட தமிழர்கள் முன் வர மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X