தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம்! திண்டிவனம்-செஞ்சி ரோடு படுமோசம்

Updated : ஜூலை 11, 2016 | Added : ஜூலை 11, 2016 | கருத்துகள் (24)
Advertisement
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம்! திண்டிவனம்-செஞ்சி ரோடு படுமோசம்

திண்டிவனம்: திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையை சீர் அமைப்பதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்(நகாய்) தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், நகராட்சி சார்பில் கோர்ட்டிற்கு சென்று தீர்வு காண முடிவு செய்துள்ளனர். திண்டிவனத்தில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த, திண்டிவனம்-செஞ்சி ரோடு வழியாக, செஞ்சி, வேலுார், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு தினந்தோறும் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி பஸ் ஸ்டேண்டிலிருந்து சந்தைமேடு வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சாலையை சீர் செய்யக்கோரி, நகர பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தனர். புதுச்சேரி-கிருஷ்ணகிரி சாலையிலுள்ள(என்.எச்.௬௬), திண்டிவனம்-செஞ்சி சாலையின் பரிதாப நிலை குறித்து, கடந்த ௨ம் தேதி தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதில், பிரச்னைக்குரிய சாலை நகாய் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழக நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நகாய் அதிகாரிகளே முன் வந்து, பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பிறகு, தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையிலுள்ள பள்ளங்களை தற்காலிகமாக ஜல்லி புவுடர் மற்றும் ஜல்லி கலவை போட்டு சீர் செய்தனர். தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கே சாலை வந்துவிட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ௩௦ம் தேதி நடந்த திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், '' திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையை மரண சாலை என்று அறிவித்துவிட்டு, நகராட்சி சார்பில் கோர்ட்டிற்கு சென்று முறையிடுவதை தவிர வேறு வழியில்லை"" என்று தெரிவித்தார். இதுபற்றி நகர்மன்ற தலைவரிடம் கேட்ட போது, '' சாலையை சீர் செய்யக்கோரி பல முறை நகாய் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. இதனால் நகராட்சி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என்று முடிவிற்கு வந்துவிட்டோம்"" என்று தெரிவித்தார். கோர்ட்டில் 'குட்டு' திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் சார்பில், செஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிபதி, தொடர்ந்து மூன்று நாட்கள், திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகே , பழுதடைந்த சாலை சீர் செய்யப்பட்டது. அதேபோல், திண்டிவனம் நகராட்சியும் கோர்ட்டில் வழக்கு போட்டு தீர்வு காணுவதற்குண்டான நடவடிக்கையை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
26-ஜூலை-201610:52:31 IST Report Abuse
S.Ganesan வேலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பற்பல குழிகள் உள்ளன. அவற்றை சரி செய்வது இல்லை. பெயரளவில் அங்கங்கே ஒட்டு போட்ட சாலை. ஆனால் சுங்க வசூல் என்னோவோ வெகு சிறப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓசூர்-பெங்களூரு ஆறு வழிப்பாதையில் மழை பெய்து குப்பையும், மணலும் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. அதை சுத்தம் செய்யாததால் இரு சக்கர வாகனங்கள் செல்லும் போது சறுக்கி விடுகிறது .தண்ணீர் தேங்குகிறது. இப்படியே விட்டால் சில நாட்களிலேயே சாலை மோசமாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-201604:22:15 IST Report Abuse
Krishna Sreenivasan சமீபத்துல கடலூர் போயிட்டுவந்தோம் விருத்தாசலம் டு கடலூர் சாலை கேவலமா இருந்துது இடுப்புல கடும் வழியே வந்தது
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஜூலை-201616:25:07 IST Report Abuse
g.s,rajan தமிழகத்தில் பல தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மிக மிக மோசமான நிலையில் உள்ளது .மோசமான சாலைகளில் சாலை விபத்துக்கள் பெருகி வருவதும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதும் மிகவும் சோகம் .குண்டும் குழியுமான பல்லாங்குழிச் சாலைகள் சரி செய்யப் படுவது எப்போது ??முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கவனிப்பாரா ???அதிகாரிகளுக்கும் ,சம்பந்தப்பட்ட மந்திரிகளுக்கு சாளை பணிகளை முடுக்கி விட ஆணை இடுவாரா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X