பொது செய்தி

தமிழ்நாடு

மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு

Added : டிச 30, 2010 | கருத்துகள் (10)
Share
Advertisement
மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு

மேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.


தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் விற்பனைக்கு வந்ததால், பெண்கள் பல தலை முறையாக மசாலா, மாவு அரைக்க பயன்படுத்திய கல் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவற்றை புறக்கணித்தனர். நகர் புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற கல் சாதனங்களை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மின் சாதங்களைப் பயன்படுத்தினர். கிராமத்தில் கூட கல் சாதனங்கள் பயன்பாடு குறைந்தது.அதனால், கல்லில் அம்மி, உரல் தயாரித்த தொழிலாளர் குடும்பத்தினர் பெரிதும் பாதித்தனர். இந்நிலையில், தமிழத்தில் கிராமம் முதல் நகரம் வரை தினமும் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மின் தடை நேரத்தில் சமையல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.அப்போது மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த முடியாது என்பதால், மின் சாதனங்களுக்கு மாற்றாக தற்போது விற்பனைக்கு வந்துள்ள மினி கல் உரல்களை பெண்கள் உபயோகிக்க துவங்கியுள்ளனர். இரு ஆண்டாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.


இது குறித்து மேட்டூரில் முகாமிட்டுள்ள கரூரை சேர்ந்த உரல், அம்மிக்கல் விற்பனையாளர்கள் கூறியதாவது: கிராமங்களில் மட்டுமே பெரிய அளவிலான உரல், அம்மி விற்பனையாகிறது. நகர் புறங்களில் விற்பனை குறைந்து விட்டால் தொழிலில் வருமானம் குறைந்து விட்டது. ஆனால், மின் தடை காரணமாக தற்போது எங்கள் தொழிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. நகர் புறங்களில் அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெரிதாக உள்ள அம்மி, ஆட்டுக்கல்லை வீட்டில் வைக்க முடியாது. எனவே, அவர்கள் உபயோகப்படுத்தும் அளவில் சிறிய அளவிலான உரலை உருவாக்கி விற்பனை செய்தோம். இந்த உரல்களுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மின் தடை நேரத்தில் இஞ்சி, பூண்டு, வத்தல் போன்ற மசாலா பொருட்களை இடித்து இன்ஸ்டண்ட் சாம்பார், ரசம் போன்றவை தயார் செய்வதற்காக மினி உரலை பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒரு உரல் 150 முதல் 250 ரூபாய் வரை விற்கிறோம். மின் தடை காரணமாக அழிந்து வந்த, எங்கள் தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. நகர் புறங்களில் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட மினி உரல்கள் விற்பனையாகி விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கந்தசாமி ஜெயதேவ் தாஸ் - பெங்களூரு,இந்தியா
31-டிச-201020:11:46 IST Report Abuse
கந்தசாமி ஜெயதேவ் தாஸ் சபாஷ், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாம் அதற்குத்தான் போக வேண்டிவரும், அதே மாதிரி மாடுகள், கழுதைகள், குதிரைகளையும் இப்போதிருந்தே காப்பாற்றி வளர்த்து, பயன்படுத்தி வர வேண்டும், அப்போதுதான் சமாளிக்க முடியும். இப்போ போகும் நிலையைப் பார்த்தால், வருங்காலத்தில் கலப்பை ஏந்தி உழவு செய்யும் அளவுக்கு வலுவான் திரண்ட தோள்களையுடை விவிசாயி கிடைப்பான என்பதே சந்தேகமாக உள்ளது. எல்லோரும் டிராக்டரைப் பயன்படுத்தி சோம்பேறிகளாகி விட்டனர், இவையெல்லாம் நிரந்தரமாக நம்மைக் காக்கப் போவது இல்லை, அதனால் நமது பாரம்பரிய விவசாய முறைதான் சிறந்தது.
Rate this:
Cancel
NARAYAN - kuwait,குவைத்
31-டிச-201012:34:33 IST Report Abuse
NARAYAN With the ongoing scam we have to find is there any scam in getting this mini autukal promotion. Hope this government is capable of doing scam with this hard labors also. (there may be some minister behind who is the real owner) there are TWO scam to be viewed One creating shortage and not to take action improving the condition. Second the promoter of this who indirectly control these Autukal labors
Rate this:
Cancel
christ - chennai,இந்தியா
31-டிச-201012:07:55 IST Report Abuse
christ வரும் தேர்தலில் திமுக வோட தேர்தல் அறிக்கை பணஓலை விசிறி, அம்மிக்கல், ஆட்டுகல், உரல், தண்ணீர் இரைக்கும் வாளி, என அனைத்தும் இலவசம் என எதிர்பார்க்கலாம் அப்படிய கற்கால வாழ்கை முறை கற்று கொள்ளலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X