பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சை எடுத்த பணத்தில் நல உதவி இப்படியும் ஒரு மாமனிதர்

Added : ஜூலை 13, 2016 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுக்கோட்டை,:முதியவர் ஒருவர், பிச்சை எடுத்த பணத்தில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நெகிழ வைத்தார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், புல் பாண்டியன், 65; பிச்சை எடுத்து பிழைக்கும் இவர், புதுக்கோட்டை மாவட்டம், புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், 320 மாணவ, மாணவியருக்கு, 30 ஆயிரம் ரூபாயில் பாய், சில்வர் டிரம், பிளாஸ்டிக்
 பிச்சை எடுத்த பணத்தில் நல உதவி இப்படியும் ஒரு மாமனிதர்



புதுக்கோட்டை,:முதியவர் ஒருவர், பிச்சை எடுத்த பணத்தில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நெகிழ வைத்தார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், புல் பாண்டியன், 65; பிச்சை எடுத்து பிழைக்கும் இவர், புதுக்கோட்டை மாவட்டம், புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், 320 மாணவ, மாணவியருக்கு, 30 ஆயிரம் ரூபாயில் பாய், சில்வர் டிரம், பிளாஸ்டிக் பொருட்கள், எழுது பொருட்கள், நோட்ஸ் ஆகியவற்றை
வழங்கினார்.பின், மாணவர்கள் மத்தியில், அவர் பேசியதாவது:என் மனைவி இறந்துவிட்டார். ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். என் பிள்ளைகள் என்னை விரட்டிவிட்டதால், வேறு வழியின்றி பிச்சை எடுத்தேன். பிச்சை எடுத்த பணத்தை கொண்டு, துாத்துக்குடியில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த போது அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
இதையடுத்து, ஏழை மாணவ, மாணவியருக்கு உதவ திட்டமிட்டேன். கும்பகோணம், வடக்குமாங்குடி, கொத்தங்குடி உட்பட, 18 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கினேன்.
திருவையாறு அருகே விளாங்குடி பஞ்., யூனியன் தொடக்கப் பள்ளியில், 125 ஏழை மாணவர்களுக்கு, 8,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கினேன்.
நான் பிச்சை எடுத்த பணத்தில் வாங்கி கொடுப்பதை, நீங்கள் ஏற்றுக் கொண்டது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது.இவ்வாறு கூறி, கண்ணீர் வடித்தார்.பொருட்களை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், முதியவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
14-ஜூலை-201623:58:02 IST Report Abuse
Shekar Raghavan அவ்வை சொன்னதை செய்த உத்தமர், பொருத்தமான தலைப்பு. மாமனிதர்
Rate this:
Cancel
venkatesan - Manama,பஹ்ரைன்
14-ஜூலை-201623:50:52 IST Report Abuse
venkatesan இவர் ஒரு மாமனிதர். இவர் பெற்ற பிள்ளைகள் வருத்தபடுவார்கள்..
Rate this:
Cancel
Sami - Tirupur,இந்தியா
14-ஜூலை-201617:18:16 IST Report Abuse
Sami செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எவரும் எந்நிலையிலும் தொடர்வார். தனக்கென்று ஒரு வாழ்வு இல்லை என அவர் எண்ணவில்லை. ஆகவே தான் உதவும் குணம் அவருக்கு அமைந்தது. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X