பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி Dinamalar
பதிவு செய்த நாள் :
பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி

நீஸ் : பிரான்சில் நீஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 84 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 84 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கண்டெய்னர் லாரியைஓட்டி வந்த டிரைவர் அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கி.மீ., வரை லாரியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைவர் யார் என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகவும் நீஸ் மாகாண கவர்னர்தெரிவித்துள்ளார்.

Advertisement


இந்தியர்களுக்கு பாதிப்பில்லை:இந்நிலையில் இத்தாக்குதலில்இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள பாரீஸில் உள்ள துாதரகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. +33-1-40507070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பிரகடனம்: இத்தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.டிரக்கரில் வந்த துப்பாக்கி- குண்டு: பயங்கரவாதி ஓட்டி வந்த டிரக்கரில் பயங்கர ஆயுதங்கள் , வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில் சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் இருந்தன. மொத்தம் 8 டன் வெடி பொருட்கள் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வெடிபொருட்கள் வெடித்திருந்தால் இன்னும் உயிர்ச்சேதம் பெரிதாகி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இது வரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement

வாசகர் கருத்து (183)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Bangalore,இந்தியா
16-ஜூலை-201611:55:00 IST Report Abuse

Rajeshநன்றி:- அமானுல்லா. எங்களுக்கு ஒரு குறை தான். உங்கள் மத தலைவர்கள் குறிப்பாக ஊடகங்களில் உலா வரும் நபர்கள் ஏன் இது போன்ற சம்பவங்கள் நடந்ததும் அதை முழு மனதாக கண்டனம் செய்வதில்லை.?

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
16-ஜூலை-201601:40:49 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)// இந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து இவைகள் எல்லாம், ஏன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாடுகளை சீரழித்தார்களே அப்போவுது எதிர் விளைவு வரும் எண்று தெரியாதா // - அதேயே தான் நாங்களும் கூறுகிறோம். அன்று முகலாயர்கள் ஹிந்துக்களை கொன்று, ஹிந்து கோவில்களை இடித்து, ஹிந்து நாடுகளின் மீது அத்துமீறி போர் தொடுத்தது உங்களுக்கு தெரியாதா ? அது தெரிந்தும் தானே அவர்களை வீரர்கள் என்று போற்றுகிறீர்கள் ? எங்களுக்கு நன்றாக தெரியும், மேற்கத்திய நாடுகள் படையெடுப்பதும் கொல்வதும் தீவிரவாதிகளை மட்டும் தான் என்று.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16-ஜூலை-201600:29:33 IST Report Abuse

raghavanஇந்த கொலைகாரனை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டார். இந்தநேரம் நரகத்தில் சகல வேதனைகளையும் அனுபவித்துகொண்டிருப்பான்.

Rate this:
மேலும் 180 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X