பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: கட்கரி| Dinamalar

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: கட்கரி

Added : ஜூலை 15, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: கட்கரி

நியூயார்க் : பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தான் அந்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் இந்திய-அமெரிக்க வர்த்தக அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடனான் நல்லுறவு வலுப்பெற இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஆதரிப்பதால் அந்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி., நிறைவேறும் :
முன்னதாக நியூயார்க்கில் இந்திய துாதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்கரி தெரிவித்ததாவது : பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும். பொருளாதார சீர்திருத்தங்களால், முதலீட்டாளர்கள் விரும்பும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. விரைவாக கொள்கை முடிவுகளை எடுப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும், வெளிநாடுகளில் இந்தியாவை பற்றிய எண்ணத்தை உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
15-ஜூலை-201621:18:50 IST Report Abuse
Subbu இப்படியே சொல்லிக்கொண்டே சவடால் விட்டு திரியுங்கள், எந்த ஒரு முடிவான தைரியமான நடவடிக்கையும் எடுக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-ஜூலை-201611:02:25 IST Report Abuse
Subburamu Krishnaswamy Terrorism is the major portfolio in Pakistan government. This portfolio is managed by the independent body comprising of army, religious fundamentalists and selfish politicians.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-ஜூலை-201610:11:59 IST Report Abuse
P. SIV GOWRI தீவிர வாதிகளை உற்பத்தி செய்வதே அங்கே தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X