என் ' டிரீம் பாய்'

Added : ஜூலை 17, 2016
Advertisement
மான் விழியால் மயக்கும் நங்கை... வசீகரிக்கும் வட்டமுக மங்கை... கொஞ்சும் பேச்சோ குளுமை... என சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் இளசுகளை சுண்டி இழுக்கும் துறு.. துறு.. கேரக்டர்களில் வெளுத்துக் கட்டி வருபவர், நடிகை அஞ்சனாஸ்ரீ. அவருடன் பேசியதிலிருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்தது? பிறந்தது வத்தலக்குண்டு. மூன்று வயதில் சென்னை சென்றோம். அங்கு தான் வளர்ந்தேன். படித்தேன்.*
என் ' டிரீம் பாய்'

மான் விழியால் மயக்கும் நங்கை... வசீகரிக்கும் வட்டமுக மங்கை... கொஞ்சும் பேச்சோ குளுமை... என சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் இளசுகளை சுண்டி இழுக்கும் துறு.. துறு.. கேரக்டர்களில் வெளுத்துக் கட்டி வருபவர், நடிகை அஞ்சனாஸ்ரீ. அவருடன் பேசியதிலிருந்து...

* பிறந்தது, வளர்ந்தது, படித்தது? பிறந்தது வத்தலக்குண்டு. மூன்று வயதில் சென்னை சென்றோம். அங்கு தான் வளர்ந்தேன். படித்தேன்.* நடிப்பில் ஆர்வம் எப்படி? குழந்தையாக இருந்த போது அம்மா ரஜினி படங்களை போட்டு காட்டி சாப்பிட வைப்பார். அவர் டான்ஸ், காமெடி, சிரிப்பு என பார்த்து வளர்ந்தேன். என்னை அறியாமல் இத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.* முதல் கேமரா அனுபவம்? பத்தாம் வகுப்பு படித்த போது சிம்புவின் 'வல்லவன்' படத்தில் குரூப் டான்சில் ஆடியது முதல் அனுபவம். அதன் பின் 'பிடிச்சிருக்கு' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தேன். 'தொட்டால் பூ மலரும்' உட்பட 20 படங்களில் நடித்தாலும் மிஸ்கின் இயக்கத்தில் 'அஞ்சாதே'யில் நரேனின் தங்கை 'கேரக்டர்' தான் பெயர் வாங்கி தந்தது. சின்னத்திரையில் 'இளவரசி' சீரியல் பெண்களிடம் 'ரீச்' ஆனது.* பிடித்தது சீரியலா சினிமாவா? சினிமாக்களை விட சீரீயல்களில் தான், நான் யார் என நுாறு சதவீதம் வெளியுலகிற்கு தெரிந்தது. மலேசியாவில் கூட எனக்கு ரசிகர்கள் உள்ளனர். என் நடிப்பை பார்த்து 'பேஸ்புக்' நண்பர்கள் அதிமாக வாழ்த்து தெரிவித்து திணறடிப்பார்கள்.* ரோல் மாடல்? சரண்யா பொன்வண்ணன். ஹீரோயினாக அறிமுகமானாலும் தற்போது நடிக்கும் 'அம்மா' கேரக்டர்கள் மூலம் கிடைத்த புகழ் அதிகம். அதுபோல் நானும் தங்கை, தோழி கேரக்டர்களில் நடித்தாலும் குடும்ப பாங்கான அம்மா கேரக்டர்கள் மூலம் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும்.* உங்களின் டிரீம் பாய்? ஆர்யா. சம்பளமே வாங்காம கூட விஜய், அஜீத்துக்கு கூட நடிப்பேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆர்யாவுக்கு தங்கையாக நடிக்க முடியாது. ஏன்னா அவர் தான் என்னோட 'டிரீம் பாய்'.* சீரியல் என்றாலே அழ வேண்டுமா? பெண்களுக்கு 'அழுமூஞ்சி' கேரக்டர்கள் மிகவும் பிடிக்கும் போல. பெண்களுக்கு உள்ள பிரச்னைகளை தான் சீரியல்கள் காட்டுகின்றன. அப்படி என்றால் பெண்கள் பிரச்னைகளுக்கு இங்கு பஞ்சமா இருக்கு. அதனால் தான் சீரியல்களில் அழ வேண்டியுள்ளது. ஆனாலும் 'சொர்ணக்கா' மாதிரி வில்லி கேரக்டரில் நடித்து அசத்த வேண்டும் என்பது என் ஆசை.* பிற மொழி சீரியல்கள் வரவு ஆபத்தா? ஆபத்து தான். இதனால் பாதிப்புகள் ஏற்படும். தமிழில் வெளிநாடு, பிற மாநில சீரியல்களுக்கு 'மவுசு' கூடி வருகிறது. இதை அனைவரும் ஒன்றிணைந்தால் தடுத்து நிறுத்த முடியும்.* புதிய பட வாய்ப்புகள் ? 'அங்காளி பங்காளி'யில் சூரியுடனும், 'மீரா ஜாக்கிரதை'யில் பாபி சிம்ஹாவுடன் நடித்தது குறித்து பேசப்படுகிறது. பெயரிடப்படாத மூன்று படங்களில் நடிக்கிறேன்.தொடர்புக்கு... anjanasri2016@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X