தேசிய விருது வாங்கி தந்த 'அழகர்சாமி குதிரை' - நெகிழ்கிறார் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி| Dinamalar

தேசிய விருது வாங்கி தந்த 'அழகர்சாமி குதிரை' - நெகிழ்கிறார் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி

Added : ஜூலை 17, 2016 | கருத்துகள் (1)
தேசிய விருது வாங்கி தந்த 'அழகர்சாமி குதிரை' - நெகிழ்கிறார் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி

கதை, வசனம் இரண்டும் எனது இரு கண்கள்,'' என்கிறார் 'தேசிய விருது புகழ்' பாஸ்கர்சக்தி. சினிமா வாய்ப்புக்கு முன் சின்னத்திரை ரசிகர்களை தன் கதை, வசனத்தால் வசப்படுத்தியவர் பாஸ்கர்சக்தி. இவரது வசனத்தில் உருவான 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படம், இவருக்கு இரண்டு தேசிய விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்தது.கலைமாமணி, தமிழக அரசின் சிறந்த வசன கர்த்தா போன்ற விருதுகள், இவரின் கதை, வசனத்துக்கு மெருகூட்டி வருகின்றன. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி, இவரது சொந்த ஊர். வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். எனினும் கதை, வசனம், சிறு கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஸ்கர்சக்தி தனது சின்னத்திரை, சினிமா வசன அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.1995 முதல் சிறு கதைகள் எழுதி வருகிறேன். சின்னத்திரையில் வெளியான 'மெட்டி ஒலி' என்னை பட்டி தொட்டியெல்லாம் பேச வைத்தது. தொடர்ந்து பல தொடர்களுக்கு கதை, வசனம் எழுதி வருகிறேன்.சினிமாவுக்காக கதை வசனம் எழுதிய முதல் படம் 'எம்டன் மகன்'. அதனை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு மாணவன், நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாண்டி, பாண்டியநாடு போன்ற திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளேன்.அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்காக எனக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் சார்பில் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்காக 'ஸ்பெஷல் ஜூரி அவார்டு' பெற்றது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். அவரிடம் பேச... 94440 34932ல் ஹலோ சொல்லலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X