தமிழ்நாடு

காகித ஆலை கழிவுநீர் திறப்பு விவகாரம் ஜன., 5ல் கரூர் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை

Added : டிச 31, 2010
Advertisement

கரூர்: புகளூர் பகுதி பாசனத்துக்கு, டி.என்.பி.எல்., ஆலை கழிவு நீர் திறந்துவிடுவது குறித்து கரூர் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்து ஜனவரி 5ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.புகளூர் டி.என்.பி.எல்., ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, அருகிலுள்ள கிராமங்களில் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது. புகளூர், பழமாபுரம், மூலிமங்கலம், தாதம்பாளையம், பாண்டிபாளையம், பொன்னியாக்கவுண்டனூர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் 1,700 ஏக்கர் விவவசாய நிலத்துக்கு பாசனம் செய்ய சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் ஆலையில் இருந்து அளிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, ஆலையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஆலை கழிவு நீரை நம்பியுள்ள பாசன பகுதியில் விவசாயப்பணி பாதிக்கப்பட்டது. பகுதி விவசாயிகள் கடந்த 24ம் தேதி கரூர் ஆர்.டி.ஓ., அசோக்குமாரிடம் மனு அளித்தனர். விவசாயிகள் கோரிக்கை குறித்து கரூர் ஆர்.டி.ஓ., தலைமையில், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் காகிதஆலை கழிவு நீரேற்று பாசன சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. நீரேற்று பாசன சங்க செயலாளர் கதிர்வேல், ஆலை உதவி பொதுமேலாளர் ராமமூர்த்தி, முதுநிலை மேலாளர் தர்மராஜ், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.
நீரேற்று பாசன சங்க விவசாயிகள் கூறியதாவது:ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர் மூன்று மோட்டார் மூலம் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டது, தற்போது இரண்டு மோட்டாராக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி டி.என்.பி.எல்., நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதுவரை பழைய வழக்கம்போல் மூன்று மோட்டார் மூலம் தண்ணீர் திறந்துவிட ஆலை நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர்.அடுத்த மாதம் நடக்கும் பேச்சுவார்த்தையில் பாசன நீர் குறித்து ஆலை நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது. மேலும், ஆலைக்கு இடம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும், சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், வேளாண்மை பல்கலைக்கழக பரிந்துரை அடிப்படையில் உரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.ஜனவரியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X