தமிழ்நாடு

லாபத்தில் இயங்கும் 195 கைத்தறி சங்கங்கள் : கண்காட்சி துவக்கி வைத்து கலெக்டர் தகவல்

Added : டிச 31, 2010
Advertisement

ஈரோடு: ""ஈரோடு சரகத்தில் 195 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், இரண்டு விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்குகின்றன,'' என்று கலெக்டர் சவுண்டையா கூறினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் கைத்தறி துணிகள் கண்காட்சி நேற்று துவங்கியது.


கண்காட்சியை துவக்கி வைத்து கலெக்டர் சவுண்டையா கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 202 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 34 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 40 ஆயிரத்து 724 கைத்தறிகளும், 2,901 விசைத்தறிகளும், தனியாரிடம் 14 ஆயிரத்து 834 கைத்தறிகள், 77 ஆயிரத்து 67 விசைத்தறிகள் உள்ளன. கைத்தறிகளில் பெட்ஷீட், துண்டு, படுக்கை விரிப்பு, திரைச்சீலை, சால்வை, ஏற்றுமதி ரகம், ஜமுக்காளம், கோரா சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 2008-09ல் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி மதிப்பு 293.35 கோடி ரூபாய்; விற்பனை 351.80 கோடி ரூபாய். 2009-10ல் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி மதிப்பு 258.09 கோடி; விற்பனை மதிப்பு 322.64 கோடி ரூபாய். 2010-11ல் நவம்பர் வரை உற்பத்தி மதிப்பு 173.89 கோடி மற்றும் விற்பனை மதிப்பு 210.91 கோடி ரூபாய்.


ஈரோடு சரகத்தில் 195 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், இரண்டு விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்குகின்றன. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 15.17 கோடி ரூபாய் மதிப்பு கைத்தறி ஜவுளி விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. சென்ற ஆண்டு கைத்தறி கண்காட்சியில் 40 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு, 69.19 லட்சம் மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டும் 40 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ஜவுளிகளுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், அசல் பட்டு ரகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உதவி இயக்குனர் வேலுசாமி, மேயர் குமார் முருகேஸ், எல்.எல்.ஏ., பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஜி.புதூர், காஞ்சிகோவில், சென்னிமலை, காங்கேயம், தாண்டாம்பாளையம் மற்றும் மதுரை, திண்டுக்கல், கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X