பொது செய்தி

இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Updated : டிச 31, 2010 | Added : டிச 31, 2010 | கருத்துகள் (4)
Share
Advertisement
புத்தாண்டு கொண்டாட்டம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புதுடில்லி: புத்தாண்டு 2011 பிறக்கும் இன்று நள்ளிரவு பார்ட்டிகள், விழா ஏற்பாடுகள் உலகம் முழுவதும் தடல், புடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் வீக் என்ட் பார்ட்டி போல இன்று வெள்ளிக்கிழமை மதியம் சீக்கிரம் பணியை முடித்து பார்ட்டிக்கு கிளம்பி வருகின்றனர்.


நட்சத்திர ஓட்டல்களில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்கூட்டியே டிக்கெட் புக் செய்துள்ளனர். சுற்றுலா மையங்கள், பீச் என மக்கள் புத்தாண்டை கொண்டாட ஆயத்தமாக உள்ளனர். கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடக்கிறது.


புத்தாண்டு நாளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து முக்கிய நகரங்களில் மக்கள் கூடுகின்ற இடங்களில் பலத்த கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக மாநில போலீஸ் துறையினருக்கு உஷார் கடிதம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக மும்பை, பீகார் , சென்னை , கோல்கட்டா, பெங்களூரூ, உள்ளிட்ட நகரங்களில் அனைத்து போலீசாரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லையோரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பல இடங்களில் வண்ண, வண்ண வானவேடிக்கைகள் கொளுத்தி மகிழ பல தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் இருந்தாலும் வரும் ஆண்டிலாவது வன்முறை இல்லாத சூழல் உருவாக அனைவரும சூளுரைப்போம்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - அபுதபி,இந்தியா
01-ஜன-201100:52:14 IST Report Abuse
kumar அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2011
Rate this:
Cancel
pandiaraj - nanchang,சீனா
31-டிச-201021:24:35 IST Report Abuse
pandiaraj இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011 இந்த ஆண்டு உங்கள் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு
Rate this:
Cancel
அ.முஹமது பிலால் - சுவாமிமலை,இந்தியா
31-டிச-201016:46:34 IST Report Abuse
அ.முஹமது பிலால் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X