கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ்

Added : ஜூலை 20, 2016 | கருத்துகள் (12)
Share
Advertisement
அலகாபாத் : பிரபல இணையதளமான கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கேட்டது.இருப்பினும் கிரிமினல்கள் பட்டியலில் தொடர்ந்து பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுஷில்குமார் மிஸ்ரா, அலகாபாத் கோர்ட்டில் கூகுள்
கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ்

அலகாபாத் : பிரபல இணையதளமான கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கேட்டது.
இருப்பினும் கிரிமினல்கள் பட்டியலில் தொடர்ந்து பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுஷில்குமார் மிஸ்ரா, அலகாபாத் கோர்ட்டில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கூகுள் நிறுவனம் மற்றும் அதன் சிஇஓ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் குப்தா என்பவரும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
20-ஜூலை-201614:02:38 IST Report Abuse
Subbu இதுபோன்ற வேண்டும் என்றே செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்ள கூடாது, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
20-ஜூலை-201613:14:40 IST Report Abuse
Ramesh Kumar SEO (search Engine Optimization) கில்லாடிகள் இந்த வேலையை செய்திருப்பார்கள்...எனினும் கூகிள்,மோடி பற்றிய குறிப்பிட்ட வலை பக்கத்தை நீக்க வசதியுள்ளது...ஏன் இன்னமும் தாமதிக்கிறார்கள் என்று தெரிய வில்லை.....
Rate this:
Cancel
baski - Chennai,இந்தியா
20-ஜூலை-201612:49:42 IST Report Abuse
baski TOP LIST ல ஜெயாவை சேர்க்காததால் GOOGLE லை உடனே தடை செய்ய வேண்டும்.....இப்படிக்கு 2ஜி ராஜா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X