'கபாலி' படத்தில் 'அம்பேத்கர்' புகழுரை : 'தலித்' பின்புலத்தில் கட்சி துவக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கபாலி' படத்தில் 'அம்பேத்கர்' புகழுரை : 'தலித்' பின்புலத்தில் கட்சி துவக்க கோரிக்கை

Added : ஜூலை 22, 2016 | கருத்துகள் (16)
Advertisement
'கபாலி' படத்தில் 'அம்பேத்கர்' புகழுரை : 'தலித்' பின்புலத்தில் கட்சி துவக்க கோரிக்கை

கபாலி திரைப்படத்தில், தலித் சமுதாயத்தினருக்கு ஆதரவாக, வசனங்கள் இடம் பெற்றுஉள்ளன. இதனால், தலித் சமுதாய ஓட்டுகளை மையமாக வைத்து, புது கட்சியை அவர் துவக்க வேண்டும் என, ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினி படம் ரிலீசாகும் போதெல்லாம், 'ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுவது வாடிக்கை. கடந்த லோக்சபா தேர்தலின் போது, தமிழக பிரசாரத்துக்கு வந்த மோடி, போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீடு தேடி சென்று, அவரை சந்தித்தார்.
முதல்வர் நாற்காலி : அதன்பின், தொடர்ச்சியாக, 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்; இந்து சக்திகளை வலுப்படுத்த வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டசபை தேர்தலில், 'டிபாசிட்' இழந்து தோல்வி அடைந்தார். கட்சியும் படுதோல்வி அடைந்தது. அவரோடு, கூட்டணி அமைத்த, ம.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட பல கட்சிகளும் தோல்வி அடைந்தன. தமிழகத்தின் மாற்று சக்தி என முழங்கிய, பா.ம.க.,வும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், 'அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, வரும், 2021ல் முதல்வர் நாற்காலியை நோக்கி ரஜினியின் அரசியல் பயணம் அமைய வேண்டும்' என, அவரது ரசிகர்கள், கபாலி பட நாயகன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, கபாலி படத்தில், தலித் சமுதாய மக்களுக்கு ஆதரவாக சில காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அதாவது படத்தில், 'ஆண்ட ஜாதியா' என்ற கேள்வி எழுப்பப்படும் போது, 'ஆளப்போகும் ஜாதி' என்ற பதில் வசனம் இடம் பெறுகிறது. இது, தலித் சமுதாய மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் முழுக்க, ஆறு இடங்களில், தலித் இன முன்னோடியான அம்பேத்கர் பெயரை, ரஜினி குறிப்பிடுகிறார்.
ரசிகர்கள் கோரிக்கை : படத்தின் இயக்குனர் ரஞ்சித், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கபாலி படத்தை திறம்பட இயக்கி முடித்ததற்காக, அவரை புகழ்ந்து தள்ளியுள்ள ரஜினி, அவரை அழைத்து முத்தமிட்டு வாழ்த்தி உள்ளார். இதனால், இந்த நேரத்தில், தலித்துகளை முன்னிலைப்

படுத்தி, ரஜினி அரசியல் இயக்கம் காண வேண்டும் என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, அவருக்கும் கடிதங்களும் அனுப்பப்பட்டு வருவதாக, ரஜினி ரசிகர்கள் பலர் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
23-ஜூலை-201619:26:16 IST Report Abuse
Paranthaman சொல்லிக்கொடுத்தபடி நறுக்காக பேசுவது சினிமா வசனம். மேடை ஏறி பேசுவது தானாக பேசுவது. விஜயகாந்தால் மேடை பேச்சை ஈடுகொடுத்து பேச முடியவில்லை. அதனால் காணாமல் போனார். ரஜினியும் அப்படியே. தற்போதுள்ள இரண்டு அரசியல் சக்திகளில் வலிமையான சக்தி அம்மாவின் முதல் சக்தி. இனிவரவேண்டிய சக்தி அரசியல் மேடையில் நன்றாக பேசக்கூடிய சக்தி வைகோவை தவிர வேறு எவரும் இல்லை. மேடை ஏறி பேசும்போது ஆறுபோல பேச்சு கிழ இறங்கி பேசும்போது சொன்னதெல்லாம் போச்சு என்ற பாணியில் பேசினால் இப்போதுள்ள மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-ஜூலை-201618:35:19 IST Report Abuse
g.s,rajan Rajini won't come to politics. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
23-ஜூலை-201617:03:12 IST Report Abuse
D.RAMIAH sri. rajini alias shivaji rao cannot become a match to MGR BECAUSE GOT POLITICAL EXPERIENCE FROM DMK - SRI. ANNAJI AND SRI MK KANUNAANIDHI JI
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X