தட்டிக் கேட்கும் தைரியம் - இயக்குனர் சூரியதாஸ்| Dinamalar

தட்டிக் கேட்கும் தைரியம் - இயக்குனர் சூரியதாஸ்

Added : ஜூலை 24, 2016 | |
கருப்படும் பொருளை உருப்பட வைப்பவனே கவிஞன். கவிஞன் காலத்தை கணிக்கும் ஞானி. சமூக மாற்றத்திற்கு பயன்படும் தோணி. கவிதைகள் காலத்தை ஊடகமாகக் கொண்டு கடந்து வந்து நிலைத்து நிற்கின்றன.எல்லா காலங்களிலும் அறம், அதர்மம், அடிமைத்தனம், ஊழல்கள், முறைகேடுகள், உறவுகள், உணர்வுகள் என அனைத்தையும் கவிதைகள் எடுத்துரைக்கின்றன.அந்த வரிசையில் 3 கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்
தட்டிக் கேட்கும் தைரியம் - இயக்குனர் சூரியதாஸ்

கருப்படும் பொருளை உருப்பட வைப்பவனே கவிஞன். கவிஞன் காலத்தை கணிக்கும் ஞானி. சமூக மாற்றத்திற்கு பயன்படும் தோணி. கவிதைகள் காலத்தை ஊடகமாகக் கொண்டு கடந்து வந்து நிலைத்து நிற்கின்றன.எல்லா காலங்களிலும் அறம், அதர்மம், அடிமைத்தனம், ஊழல்கள், முறைகேடுகள், உறவுகள், உணர்வுகள் என அனைத்தையும் கவிதைகள் எடுத்துரைக்கின்றன.அந்த வரிசையில் 3 கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார் கவிஞர் சூரியதாஸ். இவர்கவிதையையும் தாண்டி, திரைப்படங்களிலும் தனது உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிறார்.சொந்த ஊர் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளியில்1990 முதல் 2008 வரை பணியாற்றினார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.இவர், 'காலகாலுத்தம்', 'அதற்கு அப்பாலும்...','எனது சட்டைப்பையில் இன்னொருவர் வாசனை' என்ற 3 கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இதற்கு பாரத ஸ்டேட் வங்கி, த.மு.எ.ச.,வின் கவிதை உறவு, விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.மாணவர்களுக்கான நன்னெறி நுாலையும் எழுதியுள்ளார். இது 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. பிரபலமான'காதல்' திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். தற்போது 'சின்னஞ்சிறு வயதில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். பல விளம்பர படங்களையும் இயக்கிய அனுபவசாலி.கவிஞர் சூரியதாஸ் கூறியதாவது: நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய பிரமிடு ஒன்றின் ஒரு தைலத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடந்தது. அந்த உடலோடு 'பாப்ரசில்' (மொழி) எழுதிய இரண்டு வரிக் கவிதைகள் இருந்தது.“இறந்த குழந்தையோ மிகவும் சிறியது” அடைந்த துயரமோ மிகவும் பெரியது” இதுதான் அந்த கவிதை. இன்றுவரை அந்த கவிதையின் சோகம் அழியாதிருக்கிறது.உலகமயமாக்கல் மூலம் உலகம் சுருங்கி வாழ்வு பல துண்டுகளாகி விட்டது. படிப்பிற்கு தகுந்த வேலையின்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர்களின் மனதை அமைதிப்படுத்தவும், ஒரு வழிப்படுத்தவும் புத்தக வாசிப்பவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும். அதிகளவு நுால்களை வாசித்தால் தான், இப்பூமியை நேசிக்க முடியும். அப்போது கற்பனை சக்திகள்உருவாகி, கவிதைகள் ஊற்றெடுக்கும்.தன்னை நேசிப்பவன் தற்கொலைக்கு முயலமாட்டான். அப்போது வன்முறைகள் வற்றிவிடும்.எனது கவிதையில் காதல், பெண் விடுதலை, இளைஞர்களின் தன்னம்பிக்கை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்துள்ளேன்.சமூகத்தில் அநீதிகளை தட்டிக் கேட்கும் தைரியம் குறைந்து வருகிறது. அருகில் வசிப்பவரே யாரென்று தெரியாத சமூக போக்கு உள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனது கவிதை. அதுவே திரைப்படத்தின் நோக்கமும் ஆகும், என்றார். வாழ்த்த 98656 20257ல் அழுத்தலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X