புதுடில்லி: பயணத்தின்போது இசையை கேட்பதுடன், அவசர செய்திகளையும் அளிக்கும் வகையில், விரைவில், 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
ரயில்வே பட்ஜெட்டின்போது, 'ரயில் ரேடியோ அறிமுகம் செய்யப்படும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார்.
தற்போது, இந்த திட்டம், இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 'விரைவில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படும்' என, ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
தற்போது, ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில், தகவல்களை அறிவிக்கும் வசதிகள் உள்ளன
எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகை நீண்டதுார ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது
பிரபலமான, எப்.எம்., ரேடியோ சேவை அளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து, 1,000 ரயில்களில், ரயில் ரேடியோநிகழ்ச்சி ஒலிபரப்பப்படும்
இதன்படி, இசை நிகழ்ச்சிகளுடன், ரயில்வே குறித்த முக்கிய செய்திகள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒலிபரப்பப்படும் ரயில்வேயின் வரலாறு, ரயில் பாதுகாப்பு, துாய்மையாக
பராமரிக்க ஒத்துழைப்பு என, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும்
விபத்து போன்ற அவசர காலங்களில், பயணிகளுக்கு உடனடியாக தகவல்தெரிவிக்க முடியும்
இதற்காக ரயில்வே வாரியம் மற்றும் மண்டல அலுவலகங்களில் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு, அங்கிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (22)
Reply
Reply
Reply