'மான்' வழக்கில் சல்மான் விடுதலை| Dinamalar

'மான்' வழக்கில் சல்மான் விடுதலை

Added : ஜூலை 25, 2016 | கருத்துகள் (2)
Advertisement
'மான்' வழக்கில் சல்மான் விடுதலை

ஜோத்புர்: மான்களை வேட்டையாடியதாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளிலும், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 50, விடுதலை செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் மாவட்டத்தில் உள்ள பாவத் மற்றும் மதானியா ஆகிய பகுதிகளில், 1998ல், அரிய வகை மான்களை வேட்டையாடியதாக, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இது தொடர்பாக, நடந்த வழக்குகளில், சல்மான் கானுக்கு தலா, ஓராண்டு மற்றும் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து, விசாரணை கோர்ட், 2006ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, செஷன்ஸ் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவிடப்பட்டது.அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, ராஜஸ்தான் ஐகோர்ட், இரண்டு வழக்குகளில் இருந்தும் சல்மானை விடுதலை செய்து, நேற்று தீர்ப்பு அளித்தது.'மான்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட குண்டுகள், சல்மான் கானின் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியில் இருந்து செலுத்தப்படவில்லை; மேலும், சல்மான் உள்ளிட்டோரை வேட்டைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் ஜீப் டிரைவர் மாயமாகி உள்ளார். 'குற்றம் நிரூபிக்கப்படாததால், சல்மான் கான் விடுதலை செய்யப்படுகிறார்' என, ஐகோர்ட், தன் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சல்மான் கான், 2007ல், ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.முன்னதாக மும்பையில் சாலையோர நடைபாதையில் துாங்கியவர்கள் மீது, குடிபோதையில் காரை ஓட்டி ஏற்றியதாக, சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மும்பை கோர்ட், சல்மான் கானுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால், கடந்த டிசம்பரில், இந்த வழக்கிலிருந்து, மும்பை ஐகோர்ட், அவரை விடுதலை செய்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
crimson - Tharhuna,லிபியா
26-ஜூலை-201620:51:08 IST Report Abuse
crimson ஒரு புறா திருடியதாக 16 வயது மாணவனின் காலை லத்தியால் அடித்து ஊனமாக்கிய போலீஸ் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். அவன் பரம ஏழை. ஆனால் இங்கு பணக்காரன், செல்வாக்கு மிக்கவன். எளிதாக வெளியே வந்து விட்டான். கோர்ட்டு விடுதலைக்காக எழுதிய காரணம் நமது நீதி சட்டத்தை நினைத்து -பிரமிக்க வைக்கிறது. வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
26-ஜூலை-201612:06:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பணமிருந்தால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் இந்த நாட்டில், பின்னர் விடுதலை ஆகலாம். நல்ல தீர்ப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X