டில்லியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரை, ஒரே நாளில், போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை, 11 எம்.எல்.ஏ.,க்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதன் பின்னணியில், பிரதமர் மோடி இருக்கிறார். ஆம் ஆத்மி வளர்ச்சியால், அவர், விரக்தியடைந்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
தலித் மக்கள் தாக்கப்படுவது ஏன்?
மத்தியில், பா.ஜ., அரசு பதவியேற்றது முதல், நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரால், தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி அமைதி காக்கிறார். இந்த தாக்குதல்களுக்கு, அவர்
கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
மாயாவதி, முன்னாள் முதல்வர், பகுஜன் சமாஜ்
காங்., நிலைமையை மாற்றும்
உத்தர பிரதேச மக்களை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., ஆகிய கட்சிகள், ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி விட்டன. உ.பி., மாநிலம் வளர்ச்சியடையாமல் போனதற்கு, இந்த கட்சிகளே காரணம். இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்; மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமையை மாற்ற, காங்., பாடுபடும்.
குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர், காங்.,