அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினுக்கு 'செக்'


தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் ஆதிக்கத்தை குறைக்க, மீண்டும் அழகிரியை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சியில், கட்சி தலைவர் கருணாநிதி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

 தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினுக்கு   'செக்'

தி.மு.க., பொருளாளராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின், கட்சிக்குள் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார். மொத்த கட்சி நிர்வாகத்தையும் தன் கைக்குள் வைத்துள்ளார். கட்சியின் தலைவராக இருந்தும், கருணாநிதியால், கட்சிக்குள் நினைத்ததை செய்யமுடியாத நிலை நிலவி வருகிறது.

பிரதான எதிர்க்கட்சியாக...


கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை பொறுப்பேற்று சந்தித்த ஸ்டாலினால், இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. லோக்சபா தேர்தலில், ஒரு இடத்தில் கூட கட்சி வெற்றி பெறவில்லை. இருந்தாலும், சட்டசபை

தேர்தலில்,89 இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து
உள்ளது. இதையடுத்து, சட்டசபைஎதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என, கருணாநிதி விரும்பினார். அதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதோடு, தன்னையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க செய்து விட்டார். இதனால்,அடுத்தடுத்து நடந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கருணாநிதி புறக்கணித்து வருகிறார். ஸ்டாலின் தலைமையிலேயே அந்த கூட்டங்கள் நடக்கின்றன.
இது, கருணாநிதியை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இந்நிலையில், கட்சியின் மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கருணாநிதியை சந்திக்கவும், தடை போட்டு விட்டார் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு நிகராக, மதுரையில், அவரது சகோதரர் அழகிரி, கட்சிக்குள் தீவிரமாக அரசியல் செய்து வந்த போது ஸ்டாலின், கருணாநிதியை எதிர்ப்பதில், அடக்கியே வாசித்தார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின், கட்சியை விட்டு அழகிரி நீக்கப்பட்டதும், ஸ்டாலின், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.

சமாதானமுயற்சி



இதனாலேயே, தனக்கு ஸ்டாலின் நெருக்கடி கொடுத்து, தன்னை முடக்குவதாக கருணாநிதி கருதுகிறார். இதை உடைக்க, மீண்டும் அழகிரியை கட்சிக்குள் கொண்டு வர அவர் விரும்புகிறார். இதற்கான ஏற்பாட்டில் இருக்கும் அவர், அழகிரியிடம் தன் சார்பில்

Advertisement

சிலரை அனுப்பி, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, தி.மு.க.,
வட்டாரங்கள் கூறின.

அழகிரி தயாராக இருக்கிறார்!


தே.மு.தி.க.,வில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும். ஆனால், உண்மையான தொண்டர்கள் தொடர்ந்து இருப்பர். தி.மு.க.,வினர், ஐந்து முறை ஆட்சிக்கு வந்ததாக, பேசிக் கொள்கின்றனர். கீழ்த்தரமான வேலை பார்த்து, எங்கள்
இயக்கத்தை சேர்ந்தவர்களை, ஏன் இழுக்கின்றனர்.'பிரேமலதா சொன்னால், விஜயகாந்த், தி.மு.க.,வுக்கு போவார்' என, சொல்கின்றனர். ஆனால், தே.மு.தி.க.,வில் சேர, கருணாநிதி மகன் அழகிரி தயாராக உள்ளார். விஜயகாந்த் உத்தரவிட்டால், உடனடியாக சேருவார்.
- பார்த்தசாரதிதலைமை நிலைய செயலர், தே.மு.தி.க.,- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
26-ஜூலை-201622:19:55 IST Report Abuse

Venkatesh Srinivasa Raghavanசென்ற தேர்தலில் திமுக ஏறத்தாழ 90 தொகுதிகளில் வென்றதற்கு காங்கிரஸ்'ம் முக்கிய காரணம். அது ஸ்டாலின் ஒருவரால் வந்த வெற்றி மட்டும் அல்ல. காங்கிரஸ் இல்லாமல் தனியாக திமுக சென்றிருந்தால், 50-60 தொகுதிகள் வரை'தான் வென்றிருக்கும். காங்கிரஸ் தயவினால் கிடைத்த சிறுபான்மையினர் ஓட்டுகளே திமுக கூடுதலாக வெற்றி பெற்ற 35 தொகுதிகள் வரை காரணம். ஸ்டாலினால் புதியதாக ஒரு பெரிய கூட்டணி கட்சியை ஈர்க்கவும் முடியவில்லை. நம்பி வந்த காங்கிரஸ்'கு நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்று தமது கட்சியினருக்கு அழுத்தம் தரவும் இல்லை. இந்த லட்சணத்தில் அவர்தான் அடுத்த திமுக தலைவர் என்ற நிலை, ஜெயலலிதாவிற்கு பெரிய சாதகம். இப்போதைக்கு சேர்ப்பதற்கு வேறெந்த கட்சியும் இல்லாத வக்கற்ற நிலையில் இருப்பதால், திமுகவை நோக்கிதான் காங்கிரஸ் செல்லும். அது காங்கிரஸ்'கு சிறிய அளவு வெற்றி மட்டும் பயனை'தான் தரும். இதையே நிலை'தான் திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும். அந்த கோணத்தில் பார்க்கும்போது, அழகிரி கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு தான் உழைப்பதுடன் தனது கட்சியினரையும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு உழைக்க ஈடுபடுத்துவார்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
26-ஜூலை-201618:59:20 IST Report Abuse

Balajiபாச பறவைகள் பார்ட் 2 ஆரம்பம் என்று சொல்லுங்கள்..... இனி என்ன கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும்..... இதற்கு திரு.ஸ்டாலின் தரப்பினர் (குடும்பத்தினர் தான்) திரைமறைவில் ஏதாவது யாகம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்........

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
26-ஜூலை-201617:08:38 IST Report Abuse

A. Sivakumar.இப்பவே கண்ணைக் கட்டுதே

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X