எதிர்க்கட்சியில எக்கச்சக்க கோஷ்டி

Added : ஜூலை 26, 2016
Advertisement
வெளியூர் சென்று விட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த மித்ராவை, மொபட்டில் கூட்டி சென்றாள், சித்ரா. ""ஏன் இவ்ளோ ஸ்பீடு. மெதுவா போக்கா,'' என்றாள் மித்ரா. "இல்லப்பா, இங்கிருந்து மொதல்ல கிளம்பிட்டா, நமக்கு நல்லது,'' என, சித்ரா பீதியை கிளப்பினாள்.""என்னக்கா பிரச்னை'' என்றாள் மித்ரா.""பஸ் ஸ்டாண்ட் என்றாலே பல பிரச்னை. நம்ம ஊர்ல பலான பிரச்னை,'' என, வெறுப்பை கொட்டினாள்
எதிர்க்கட்சியில எக்கச்சக்க கோஷ்டி

வெளியூர் சென்று விட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த மித்ராவை, மொபட்டில் கூட்டி சென்றாள், சித்ரா. ""ஏன் இவ்ளோ ஸ்பீடு. மெதுவா போக்கா,'' என்றாள் மித்ரா. "இல்லப்பா, இங்கிருந்து மொதல்ல கிளம்பிட்டா, நமக்கு நல்லது,'' என, சித்ரா பீதியை கிளப்பினாள்.
""என்னக்கா பிரச்னை'' என்றாள் மித்ரா.
""பஸ் ஸ்டாண்ட் என்றாலே பல பிரச்னை. நம்ம ஊர்ல பலான பிரச்னை,'' என, வெறுப்பை கொட்டினாள் சித்ரா.
""அது தான், ராத்திரியான அங்கங்கே நடக்குதே. திருப்பூருக்கு இது புதுசில்லையே. இப்பெல்லாம், பகல்லயே நடக்குது. தனியா நிக்கற ஆண்களை, ஒரு கும்பல் மடக்கி, பாத்ரூம் பக்கமா நின்னுட்டு, "பலான' பெண்கள் சிலர், மிரட்டி பணத்தை பறிக்கிறாங்க,' என்ற சித்ரா கூறி முடிப்பதற்குள், ""அடப்பாவமே! போலீஸ்
அவுட் போஸ்ட்ல புகார் செய்யறதுதானே,'' என்றாள் மித்ரா.
""அங்க எப்பக்கா, போலீஸ் இருக்குது? அப்டியே சொன்னாலும், புகார் கொடுத்த ஆளையே குற்றவாளியாக்கி விடறாங்க இந்த பெண்கள். அங்க, கடை வச்சுருக்கிற வியாபாரிகளும் இதைய கண்டுக்கறதில்ல,'' என்றாள் சித்ரா.
""ஆமாம். இவர்களுக்கு தலைவி போல் ஒரு பெண். எந்நேரமும் "மப்புல' சுத்தி வர்றார். சிக்குற ஆண்களிடம் பணம் பறித்துக் கொள்வது இவரோட வேலை. புது பஸ் ஸ்டாண்டிலும் இதே கூத்துதான், '' என்றாள் மித்ரா.
""திருப்பூர் வந்த ஸ்டாலின், நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேசினாராம். கட்சியிலே, ஏதும் பிரச்னையா,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, ""வழக்கம் போல், கோஷ்டி பிரச்னைதான். அதுதான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்னு புகார் சொல்லியிருக்காங்க. இந்த முறை வடக்கு, தெற்கு, என, ரெண்டு மாவட்ட செயலாளர்கள் மீதும் சரமாரியாக புகார் போயிருக்கு. உள்ளாட்சி தேர்தலில் நல்லா வேலையை பாருங்க; அதற்கு முன்னாடி கோஷ்டி பிரச்னைக்கு முடிவு கட்டறேன்னு ஸ்டாலின் சொன்னாராம்,'' என்றாள்.
""எந்தெந்த வார்டு "லேடீஸ்' வார்டு ஆகுதுன்னு, அதிகாரிகளை நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.
""இருக்காதா பின்னே? தேர்தல் வருதுல்ல... "சிட்டிங்' கவுன்சிலருங்க எங்க நிக்கலாம்னு முடிவு பண்ணனுமே?'' என்றாள் சித்ரா.
""ரொம்ப கரெக்டா சொன்ன, மாநகராட்சியில, 21 "லேடி' கவுன்சிலருங்க. மொத்தம் இருக்கற, 10 எதிர்க்கட்சி கவுன்சிலர்ல, ஆறு பேர் லேடீஸ். வரும் உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீத ஒதுக்கீடு இருந்தா, 30 "லேடீஸ்' வார்டு இருக்கணும். எதிர்க்கட்சில ஜென்ட்ஸ் கவுன்சிலர் இருக்கற வார்டுகளையும், லேடீஸ் வார்டா மாத்த முடிவு பண்ணியிருக்காங்க. அப்படிப்பார்த்தா, நாலு எதிர்க்கட்சி வார்டு மாறினாவே போதும்னு, ஆளுங்கட்சி வட்டாரம் கணக்கு போட்டியிருக்கு''
""ம.ந.கூட்டணில, கம்யூ., கட்சி நின்னா, வார்டுக்குள்ள மத்தவங்க ஜெயிக்கறது சந்தேகம்தான். அதனால, "மெஜாரிட்டி' வராவிட்டாலும், எப்டியாவது கவுன்சிலர்களை இழுத்துடனும்னு, ஆளுங்கட்சில ரகசிய உத்தரவு போட்டிருக்காங்கலாம்,'' என்றாள் மித்ரா.
""ம.ந. கூட்டணி இட ஒதுக்கீட்ல ஒத்துவராம, பிரிஞ்சுடுவாங்கனு, ஆளுங்கட்சிக்காரங்க பிரசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,''
என்றாள் சித்ரா.
""போன வாரத்துல, ம.ந.கூட்டணி நிர்வாகிங்க இது சம்பந்தமா பேசுனாங்க. இட ஒதுக்கீட்ல சுமூகமாக இருந்து, மாநகராட்சியில கவுன்சிலர் சீட்ட அதிகமா பிடிக்கோணும்ன்னு உறுதியா பேசியிருக்காங்க. போன எலக்ஷன்ல, எம்.எல்.ஏ., இருந்தும் கூட, மா.கம்யூ., கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் இல்லாம போயிட்டாங்க.
""ஏதோ, 3வது வார்டு கவுன்சிலர் ஒருத்தராவது இருக்காரு. அதனால, பழைய பலத்தை நிரூபிக்கற மாதிரி, வார்டுக்குள்ள வேலை செஞ்சு, கவுன்சிலர் பதவிகளை பிடிச்சு, ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்கணும்னு தீர்மானம் பண்ணியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அதுதான், போன மாசத்துல இருந்தே பழைய பிரச்னைக்காக கொடி பிடிச்சு, போராட்டம் அப்பிடி இப்பிடின்னுட்டு, கோஷம்போட ஆரம்பிச்சுட்டாங்களே?'' என்றாள் மித்ரா.
""ஆளுங்கட்சி "மாஜி' மறுபடியும் பெரிய பதவிய பிடிக்கோணும்னு போராடிட்டு இருக்காரு. அவர் வீடு இருக்கற வார்டுல, இ.கம்யூ., பலமா இருக்கறதால, 10வது வார்டுல நிக்க யோசிச்சுட்டு இருக்காருனு, கட்சிக்காரங்க பேசிக்கறாங்க,'' என்று சித்ரா சொன்னதும், ""அக்கா, நானும், "மாஜி' மேட்டரு சொல்றேன், கேளுங்க. அவரோட பி.ஏ.,வுக்கு ஈரோடு கோர்ட் "பிடிவாரன்ட்' போட்டிருக்கு. கவர்மென்ட வேலைக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஒருத்தரு, கோர்ட்டுக்கு போயிட்டாரு. இதனால, "மாஜி' செம அப்செட்டாம்,'' என்றாள் மித்ரா.
""மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாறியது,"டையிங்' காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமாம்,'' என்றாள் சித்ரா.
""அடிக்கடி அதிகாரிங்க மாறினா, அவங்களுக்கு சிரமம் தானே?'' என்றாள் மித்ரா.
""புதுசா மாறினாத்தானே சிரமம்; மாவட்ட பொறியாளரை, சில மாசத்துக்கு முன்னாடி, ஊட்டிக்கு மாத்தினாங்க; "குளிர்' தாங்க முடியாம, "வெயில் காயலாம்'னு மறுபடியும், திருப்பூருக்கே "டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வந்திருக்காரு. அவரு பழைய ஆளுங்கிறதால, "சரியா' பாத்துக்கலாம்னு, "டையிங்'காரங்க ரொம் சந்தோஷமா இருக்காங்க,''என்றாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X