நிடா அம்பானிக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு; கெஜ்ரிவால் கண்டனம்| Dinamalar

நிடா அம்பானிக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு; கெஜ்ரிவால் கண்டனம்

Added : ஜூலை 26, 2016 | கருத்துகள் (42)
Advertisement
நிடா அம்பானிக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு; கெஜ்ரிவால் கண்டனம்

புதுடில்லி: முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதற்கு டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருடைய மனைவி நிடா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதன்படி, துப்பாக்கியுடன் கூடிய சி.ஆர்.பி.எப்., கமாண்டோக்கள் 10 பேர் நிடா அம்பானிக்கு முழுநேர பாதுகாப்பு அளிப்பார்கள். நிடா அம்பானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்ததன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நிடா அம்பானிக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதவில் " டில்லியில் தினமும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்படுகிறது. பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், பிரதமர் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
27-ஜூலை-201613:06:48 IST Report Abuse
Durai Ramamurthy டில்லியில் தினமும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று கூறும் நீங்கள் யாரோ ஒருவரல்ல ..தினமும் கற்பழிப்பு நடைபெறும் டில்லியின் முதலமைச்சரே நீங்கள்தான். மத்திய அரசை எதிர்ப்பதாக கருதி உங்கள் முகத்தில் நீங்களே சாணியை அள்ளி அப்பிக்கொண்டுள்ளீர்கள்.
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-201620:47:40 IST Report Abuse
Indianஆனால் அங்கெ இருக்கும் போலீசார் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீங்கள் முறையிட வேண்டியது மோடியிடம் தான்.. சும்மா நுனிப்புல் மேயும் வீரர்களாக இல்லாமல் கொச்சமாவது பொது அறிவோடு பேசுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201609:51:13 IST Report Abuse
Venki திருடனுக்கு தேங்காய்ப்பால் சோறு
Rate this:
Share this comment
Cancel
Common Man - Madurai,இந்தியா
27-ஜூலை-201608:00:59 IST Report Abuse
Common Man பிரதமரின் முதலாளி குடும்பத்திற்கு பாதுகாப்பு தேவை தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X