பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான விமானத்தில் பயணம் செய்தோர் பட்டியல் வெளியீடு

Added : ஜூலை 27, 2016
Share
Advertisement
தாம்பரம்: சென்னை, தாம்பரத்தில் இருந்து, 29 பேருடன் அந்தமான் தீவுக்கு சென்ற விமானப்படை விமானம், கடந்த, 22ம் தேதி, மாயமானது. ஏ.என்., - 32 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் பயணம் செய்த, 29 பேரின் பெயர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த தமிழர், முத்துகிருஷ்ணன் என்பவர், விமானத்தில் பயணம் செய்துள்ளார். மேலும், பாட்சாரா (கேப்டன்), பி.கே.நந்தால் (துணை விமானி), குணால்

தாம்பரம்: சென்னை, தாம்பரத்தில் இருந்து, 29 பேருடன் அந்தமான் தீவுக்கு சென்ற விமானப்படை விமானம், கடந்த, 22ம் தேதி, மாயமானது. ஏ.என்., - 32 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் பயணம் செய்த, 29 பேரின் பெயர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த தமிழர், முத்துகிருஷ்ணன் என்பவர், விமானத்தில் பயணம் செய்துள்ளார். மேலும், பாட்சாரா (கேப்டன்), பி.கே.நந்தால் (துணை விமானி), குணால் பார்பேட்டி, ரஞ்சன் (பொறியாளர்), ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, பி.சந்த், முகேஷ் தாகூர், அகிலேஷ், பிபின்குமார், எல்.கே.திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், சி.எஸ்.யாதவ், ஏக்நாத் தாக், ஜின்சா, ஷியாம், விமல், பிரசாத் பாபு, பூர்ண சந்திரா, சந்திரன் மகாராணா, சின்ன ராவ், சீனிவாச ராய், சம்பவ் மூர்த்தி, பூபிந்தர் சிங், நாகேந்திர ராவ், சஜீவ் குமார் ஆகியோர், காணாமல் போன விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.விமானத்தில் பயணம் செய்தோரின் பெயர் பட்டியலை வெளியிடாமல், இந்திய விமானப்படையினர், சேலையூர் போலீசார் உள்ளிட்டோர், மவுனமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு, 8:00 மணிக்கு மேல், திடீரென, தாம்பரம் கோட்டாட்சியர், ராஜேந்திரன், விமானத்தில் பயணம் செய்தோரின் பட்டியலை வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X