அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வர் ஜெ.,வை புகழ எதிர்ப்பு
அமைச்சர் 'டென்ஷன்'

சென்னை:முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து, ''இதுதான், உங்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடா,'' என, அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ஜெ.,வை புகழ எதிர்ப்பு :அமைச்சர் 'டென்ஷன்'


சட்டசபை நேற்று துவங்கியதும் பேசிய, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ''எய்ம்ஸ் மருத்துவமனையில், தமிழக மாணவர் மர்மச்சாவு; அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட, 34 ஒத்திவைப்பு தீர்மானங்கள் தந்துள்ளேன். அதுபற்றி விவாதிக்க வேண்டும்,'' என, கோரினார்.

வரலாறு:

அதற்கு சபாநாயகர், அந்த பிரச்னைகளை படிப்படியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வ தாக கூறினார். பின், தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணி பேசியதாவது:தேசிய வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். வி.பி.சிங் ஆட்சியின்

போது, 600 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த வரலாறு உண்டு. உங்களிடம், 50 எம்.பி.,க்கள் இருக்கிறார்களே; நீங்கள் மத்திய அரசை கேட்கலாமே இவ்வாறு அவர் பேசியதும், அதற்கு பதிலளிக்க எழுந்த, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் ராஜூ, முதலில் முதல்வரை புகழ்ந்தார். அதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு, அ.தி.மு.க., உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.

செல்லுார் ராஜூ: என்னை இங்கு அமரவைத்து அழகுபார்த்த தலைவியை புகழ்கிறேன்.
சபாநாயகர் தனபால்: அமைச்சர், முதல்வரை புகழ்ந்துவிட்டு, உங்களுக்கு பதிலளிக்கத்தான் போகிறார்.அதன்பின்னரும், தி.மு.க., உறுப்பினர் கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி உள்ளிட்ட பலர் எழுந்து நின்று பேசியபடி இருந்தனர்.

தள்ளுபடி:

செல்லுார் ராஜூ: உங்கள் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரே அமைதியாக இருக்கும் போது, அவர்களையும் மீறி, என்னை பேச விடாமல் கூச்சல் போடுகிறீர்கள். உங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதுதானா? நீங்கள் கூடத்தான் தாத்தா, பேரன், கொள்ளுப் பாட்டியை பற்றிபேசுகிறீர்கள்.இவ்வாறு அமைச்சர் கோபமாக கூறிய பின், 5,780 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாய கடனை, மாநில அரசு தள்ளுபடி செய்ததை குறிப்பிட்டார்.

'எங்களுக்கும் அப்படித்தான் எரியுது--!' :

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில், நேற்று பேச துவங்கிய

Advertisement

தி.மு.க., உறுப்பினர்நேரு, 'தமிழ் கூறும் நல்லுலகின் தலைவரே' என, தன் கட்சி தலைவர் கருணாநிதியை புகழ்ந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவை, அமைச்சர் செல்லுார் ராஜூ பாராட்டி பேசியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் எழுந்த பிரச்னை, அப்போது தான் முடிவுக்கு வந்திருந்தது. இந்நிலையில், நேரு, அவரது தலைமையை பாராட்ட துவங்கியதும், அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோபத்துடன் எழுந்து குரல் கொடுத்தனர்.

அதற்கு நேரு, 'நீங்க பேசுறப்போ, எங்களுக்கும் இப்படித்தான் எரியுது' என்றார். இதனால், எதிர்க்கட்சி வரிசையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. அப்போது சபாநாயகர், 'பட்ஜெட் பற்றி மட்டும் பேசுங்க' என, சொன்ன பின்னும், கருணாநிதி, ஸ்டாலின் புகழுரையை முடித்த பின்னே, பட்ஜெட் பற்றி நேரு பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
27-ஜூலை-201617:57:22 IST Report Abuse

Balajiஇவர்கள் இருவரும் சட்டசபையை புகழ் பாடும் மையமாக மாற்றிவிடுவார்கள் போல தெரிகிறது..... அதிமுக உறுப்பினர்களைப்பற்றி தான் அனைவருக்கும் தெரியுமே (அவர்கள் முதலில் அம்மா புராணம் பாடாமல் எதையும் செய்யமாட்டார்கள் என்று)....... இதைப்பெரிது படுத்தி அவையில் நேரத்தை வீணடிக்க வேண்டுமா???

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-ஜூலை-201622:13:58 IST Report Abuse

LAX'அதிமுக உறுப்பினர்களைப்பற்றி தான் அனைவருக்கும் தெரியுமே' - தானை & கோ.வினர் 'புராணம்' பாடும்போது உங்களைப்போன்றோர் காதுகள் செயலிழந்து போய்விடுமோ..? ...

Rate this:
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
27-ஜூலை-201615:35:08 IST Report Abuse

Ramshanmugam Iyappanஇவர்கள் எல்லாம் எதற்கு சட்டசபைக்கு சென்றார்கள்... புகழ்வதை விட்டுவிடுங்கள், மக்களுக்கு நல்லதை செய்யுங்கள். நல்லவற்றை, நல்லவர்களை மக்கள் புகழ்வார்கள்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-ஜூலை-201614:41:02 IST Report Abuse

இந்தியன் kumarஏட்டிக்கு போட்டி சபை மக்கள் நலனில் அக்கறை இல்லை , தங்களின் தலைவர்களை புகழ்வதில் காலம் ஓடிவிடும். சுதந்திரம் வாங்கியும் அடிமைத்தனம் போகவில்லை.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X