மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு| Dinamalar

மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு

Added : ஜூலை 27, 2016 | கருத்துகள் (5)
Advertisement
மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவில், இது சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசிடன் கலந்தாலோசித்து, அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
crimson - Tharhuna,லிபியா
27-ஜூலை-201623:32:22 IST Report Abuse
crimson ராஜிவ் காந்தி கொலைக்கு மூல காரணன் பிரபாகரன் யுத்தத்தில் செத்துப்போனான்.மேலும் கொலையை நிறைவேற்றிய தனு தற்கொலை கொண்டு வெடிக்க செய்து அன்றே மடிந்தாள். மேலும், அவளை இயக்கிய சிவராஜன் போலீஸ் தாக்குதலின் போது, சயனைட் சாப்பிட்டு செத்தான்.ஆனால், இந்த குற்றவாளிகள் (நளினி தவிர) பிறர் இதை முன் கூட்டியே அறிந்ததாக எந்த ஒரு நிரூபணமும் இதுவரை இல்லாத நிலையில் இவர்களை விடுவிப்பது நல்லது.மேலும் இவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்ட்தால் விடுதலை கொடுப்பதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
ideamani - vridhachalam,இந்தியா
27-ஜூலை-201618:15:00 IST Report Abuse
ideamani அவர்கள் ஏற்கெனவே பாதி ஆயுளை சிறையிலே கழித்து விட்டார்கள் மீதமுள்ள நாட்களையாவது அவர்களின் குடும்பத்தினருடன் வாழ வழி செய்யுங்கள் .தமிழக அரசின் முடிவு சரியானதுதான் .எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Subbu - chennai,இந்தியா
27-ஜூலை-201618:01:16 IST Report Abuse
Subbu இதை உச்சநீதிமன்றம் ஏற்கவே கூடாது, 7 கொலைகாரர்கள்,திட்டமிட்டு முன்னால் பிரதமரை படுகொலை செய்து உள்ளார்கள், அவர்களை விடுவிப்பதற்கு இந்த கேடுகெட்ட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாம், மனம் கொதிக்கிறது, என்ன சட்டம்,என்ன நீதி இது, இப்படிப்பட்ட அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் ஆளும் கட்சிகளின் குண்டர்கல், கொளைகரார்கள், திருடர்கள் அயோக்கியகர்கள் போன்ற எல்லாவறையும் இவர்கள் அதிகாரத்தை வைத்து தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்து விடுவார்கள், திருடர் கருணாநிதி ஆரம்பித்து வைத்த அண்ணா பிறந்தநாள் சிறப்பு விடுதலை என்ற படுபாதக செயல்தான் இது. அவரை வரலாறு என்றும் மன்னிக்கபோவதில்லை.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
28-ஜூலை-201610:41:32 IST Report Abuse
parthaநான் இதனை பெரிதும் ஆமோதிக்கிறேன். முன்னாள் பிரதமர் மட்டும் அல்ல அவருடன் சேர்ந்து பலப்பல அப்பாவிகளின் உயிரை குடித்த இந்த நிருபிக்கப்பட்ட கொலைகாரர்கள் தூக்கிலிருந்து ஆயுள் தண்டனைக்கு மாற்றியதே UPA அரசு செய்த பெரும் தவரால்தான் என்பதில் ஐயமில்லை. மேலும் ஆயுள் தண்டனை என்பது அவர்கள் ஆயுள் முடியும்வரை சிறையில் என்றுதான் பொருள். இதை சுப்ரீம் கோர்ட் விடக்கூடாது. விட்டால் பின்னாளில் நிறைய கிரிமினல்களும் கொலைக்காரர்களும் இதை உதாரணம் காட்டி தப்பிக்க முயல்வார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X