பொது செய்தி

தமிழ்நாடு

குப்பத்துக்கும் இசையை சேர்த்ததால் கிருஷ்ணாவுக்கு மகசேசே

Updated : ஜூலை 27, 2016 | Added : ஜூலை 27, 2016 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: மேல்தட்டு மக்களுக்கான இசை என கூறி வந்த கர்நாடக இசையை குப்பத்து மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததால், டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.கிருஷ்ணாவின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை
குப்பத்துக்கும் இசையை சேர்த்ததால் கிருஷ்ணாவுக்கு மகசேசே

சென்னை: மேல்தட்டு மக்களுக்கான இசை என கூறி வந்த கர்நாடக இசையை குப்பத்து மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததால், டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாவின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண்டு காலம் டி. எம். கிருஷ்ணா இசைப்பயிற்சி பெற்றுள்ளார்
கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதால் விருது பெற்றிருக்கும் பிரபல கர்நாடக இசைப் பாடகர், எழுத்தாளர், செயற்பாட்டாளர் டி.எம் கிருஷ்ணா, மேல்தட்டு மக்களுக்கான இசையாக கருதப்படும் கர்நாடக இசை, சாதி சார்ந்துள்ளதாகவும், அப்படி இல்லாமல் அனைத்து மக்களுக்குமானது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர். கர்நாடக இசை, பரத நாட்டியம் போன்றவற்றைக் குப்பத்து மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் டி.எம். கிருஷ்ணா மற்றும் சிலரால் சென்னையில் 'ஊரூர் ஆல்காட் குப்பம் விழா' என்ற கலை விழா இரண்டு வருடங்களைத் தாண்டியுள்ளது.
இலங்கையில் இசை நிகழ்ச்சிகள்: இலங்கை கொழும்புவில் 2010ல் இசைக் கச்சேரி செய்த டி. எம். கிருஷ்ணா, 2011ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அக்கல்லூரியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப்போவதாக கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
கிருஷ்ணாவுக்கு கிடைத்த விருதுகள்:சிறந்த முக்கியக் கலைஞர் - யூத் அசொசியேசன் போர் கிளாசிக்கல் மியூசிக், 1989திறமைமிகு பாடகர் (25 வயதிற்குக் கீழ்)- மியூசிக் அகாடமி (சென்னை), 1994சிறந்த இளம் பாடகர் - கிருஷ்ண கான சபா, 1995சிறந்த இசைக் கலைஞர் - நாரத கான சபா, 1995அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் விருது - மியூசிக் அகாடமி (சென்னை), 1996யுவ கலா பாரதி - பாரத் கலாச்சார், 1997ஸ்ரீரங்கம் கோபாலரத்தினம் விருது - மியூசிக் அகாடமி, 1998ராமகிருஷ்ண ஐயர் விருது - மியூசிக் அகாடமி, 1999சிறந்த கலைஞர் - மியூசிக் அகாடமி, 2001இளைஞர் விருது - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 2001கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2001இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2014

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-ஜூலை-201606:59:33 IST Report Abuse
ஆரூர் ரங் குறிப்பிட்ட சாதியின் கையில் கர்நாடக இசை இருக்கிறது என்று பேசியே முன்னேறிவிட்டார் ஆனால் TTK வீட்டுப் பேரன் என்பதால்தானே முதல் கச்சேரியே மியூசிக் அகாடெமியில் வாய்ப்பு கிடைத்தது? அது மட்டும் சாதி அபிமானமில்லையா? சரி சாதிப்பை பிரச்னைக்கே வருவோம் .மதுரை சோமு எம் எஸ் MLV சீர்காழி கோவிந்தராஜன் MKT பாகவதர் யேசுதாஸ் போன்ற பல மாற்று சாதியினர் கொடிகட்டிப் பறந்தனர் அவர்களை இவர் குறிப்பிட்ட சாதியினர்தானே அதிகம் ரசித்தனர்? போனாப்போவது மலை சாதி பிள்ளைகளுக்கு இலவசப் பள்ளி மீனவர்களுக்கும் மரியாதை எனும் நற்செயல்களுக்காக மன்னிப்போம் வாழ்த்துவோம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-ஜூலை-201606:54:43 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு விளம்பர நோக்கத்துக்காக அழைப்பவர் முதன் முதலாக ஒரு இசைக்க கலைஞருக்கு அரசியலுகாகப் பரிசு கிடைத்துள்ளது ஆனால் ஒரு அரசியல்வாதி இசைக் கலைஞர் விருது வாங்கமுடியுமா?
Rate this:
Cancel
Uday - Texas,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201605:35:28 IST Report Abuse
Uday மேல்தட்டு மக்கள் என்றும் குப்பத்து மக்களை கீழ்த்தட்டு என்றும் இங்கு ஏதேன் அடிப்படையில் சொல்லப்படுகிறது ? கல்வி அடிப்படையில் ? பொருளாதாரம் அடிப்படையில் ? ட்ரெஸ்ஸிங் ? கலர்? ஒரு பிரிவு மக்கள் என்று சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X