துப்புரவு தொழிலாளருக்காக போராடி விருது பெற்ற வில்சன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

துப்புரவு தொழிலாளருக்காக போராடி விருது பெற்ற வில்சன்

Updated : ஜூலை 27, 2016 | Added : ஜூலை 27, 2016 | கருத்துகள் (5)
Share
பெங்களூரு: மனித கழிவை மனிதனே அகற்றும் நடைமுறைக்கு எதிராக போராடிய கர்நாடகாவை சேர்ந்த பெஜ்வாடா வில்சனுக்கு ரமோன் மகாசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.மகசேசே விருது பெற்ற பெஜ்வாடா வில்சன், 1966ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். ரசேல் பெஜ்வாடா மற்றும் ஜேகோப் பெஜ்வாடா தம்பதியினரின் கடைசி குழந்தையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை
துப்புரவு தொழிலாளருக்காக போராடி விருது பெற்ற வில்சன்

பெங்களூரு: மனித கழிவை மனிதனே அகற்றும் நடைமுறைக்கு எதிராக போராடிய கர்நாடகாவை சேர்ந்த பெஜ்வாடா வில்சனுக்கு ரமோன் மகாசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
மகசேசே விருது பெற்ற பெஜ்வாடா வில்சன், 1966ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். ரசேல் பெஜ்வாடா மற்றும் ஜேகோப் பெஜ்வாடா தம்பதியினரின் கடைசி குழந்தையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை மனித கழிவை அகற்றும் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது சகோதரர் ரயில்வேயிலும், கோலார் தங்க சுரங்கத்திலும் மனித கழிவை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். வில்சன் பெஜ்வாடா, ஆரம்ப படிப்பை ஆந்திராவிலும், மேல்படிப்பை கோலாரிலும் படித்தார். அவர் படிக்கும் போது சகமாணவர்கள் கிண்டல் செய்தனர். அவரது பெற்றோரிடம் இது பற்றி கூறியபோதும், அவர்களும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களால் கிண்டல் செய்யப்படுவதை கூறியதை கேட்டு மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார். அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற வில்சன், பின்னர் சமூகபணிகளில் ஈடுபட துவங்கினார். பல குழந்தைகள் படிப்பை கைவிட்டு, மனித கழிவு அகற்றும் பணிக்கு செல்வதை பார்த்து வேதனை அடைந்த அவர், அவர்களை கல்வி கற்க வைக்க தீவிர முயற்சி செய்தார். அந்த சமயத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வில்சன் சென்ற போது, அரசு ஊழியர் வில்சனின் விருப்ப பணி மனித கழிவை அள்ளுவது என தானாகவே எழுதினார்.

தொடர்ந்து மனித கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்து போராட துவங்கினார். முதலில் தனது போராட்டத்தை தன வீட்டில் துவங்கினார். முதலில் இதை ஏற்க பெற்றோர்களும், உறவினர்களும் மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டனர். அவர் சமூகத்தில் பலர் மனித கழிவு அள்ளுவதை வெளியே கூறுவதை மறைத்தனர். ஆனால் வில்சன் அதனை உடைத்து உண்மையை கூற துவங்கினார். இதன் பின்னர், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க பத்திரிகைகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்கட்சி தலைவர்கள், முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுத துவங்கினார். ஆனால் இந்த கடிதம் பல முறை ஏற்கப்படவில்லை. 1993ம் ஆண்டு மனித கழிவை மனிதன் அகற்றுவதை தடுக்க சட்டம் இயற்றியது. இதன் பிறகு மனிதன் கழிவை அகற்றுவதை படம் பிடித்து வில்சன், அதிகாரிகளுக்கு அனுப்பி இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, பிரச்னை என்பதை கர்நாடக அரசு உணர்ந்தது. பின்னர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வில்சன் ஈடுபட்டார். மனித கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழிக்கும் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இதன் பின்னர் ஆந்திரா சென்ற வில்சன், அங்குள்ளவர்களுடன் இணைத்து செயல்பட துவங்கினார். இவரின் கடும் முயற்சியை தொடர்ந்து, 2001ல் ஆந்திராவில் மனித கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு ஒப்புக்கொண்டது.
கடந்த 2003ல் வில்சன் மற்றும் சிலர், மனித கழிவை மனிதன் அகற்றுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அனைத்து மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்களும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒரு ஆரம்பமாக இருந்தது. அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் இந்த வழக்கில் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து 2010 மனித கழிவை மனிதன் அகற்றும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. முதன்முறையாக இந்த சட்டத்தை மீறியதாக அரியானாவில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மனித கழிவை மனிதன் அகற்றும் முறையை தடுப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் அதிகாரிகளை சந்தித்து வில்சன் ஆலோசனை கூறினார். கடந்த 2010ம் ஆண்டு மனிதனே மனித கழிவை அகற்றுவது தேசிய அவமானம் என அறிவிக்குமாறு, பிரதமராக இருந்த மன்மோகனுக்கு சோனியா கடிதம் எழுதினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X