பதிவு செய்த நாள் :
கொலை பண்ண போறாங்க!':
அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்

புதுடில்லி:''பிரதமர் மோடி, என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரி வால் கூறியுள்ளார்.

'கொலை பண்ண போறாங்க!':அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்

டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கெஜ்ரி வால், முதல்வராக பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி ;வருகிறார். பிரதமர் மோடியையும், கடுமை யாக விமர்சிக்கிறார்.

இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளால்,

டில்லி அமைச்சர்களும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 'ஆன்லைனில்' வீடியோ ஒன்றை, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்அதில் அவர் கூறியுள்ளதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைகளுக்கு, மூளையாக செயல்படுவது, பிரதமர் மோடி தான். இதை, நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

ஆம் ஆத்மி கட்சியை எப்படியாவது அழித்துவிட, மோடி துடிக்கிறார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க் களுக்கும், தொண்டர்களுக்கும், வரும் நாட்கள் மிகவும் மோசமாக இருக்கும்.

இந்த சவாலை எதிர்கொள்ள தைரியமில்லாதவர்கள், எங்களை விட்டு சென்றுவிடலாம். ஏனெனில், நம்மை அழிக்க, பிரதமர் மோடி, எதையும் செய்ய தயங்கமாட்டார். என்னை கொலை செய்தாலும் செய்வார். அதனால், உங்கள் குடும்பத்தினரிடம் பேசி,

Advertisement

எந்த தியாக மும் செய்வதற்கு தயாராகுங்கள்.

பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில், ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருவது, மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், நம்மை அழிக்க எதையும் செய்ய துணிவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-201617:42:02 IST Report Abuse

suresh kumarமோடி...ஒரு சகாப்தம்...ஆம்..சதிகளின் சங்கமம்... வீழ்த்தப்பட்டோர் ஏராளம்...ஆனால் எப்போதும் எல்லாமும் சாதகமாக இருக்காது...ஆனால் இந்த மோடி பதவிக்காக இந்திய ஏழைகளை பார்த்து ஓட்டு கேட்டு வரும்போது நடிப்பாரே...நான் மோர் வித்தேன் ..சுண்டல் வித்தேன்...அப்படின்னு...இதுவரை ஒற்றை இலக்கம் இவருக்கு பஞ்சாபில் உறுதி என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது கூட இவருக்கு மக்கள் கொடுக்க மாட்டார்களோ என்ற ஐயமும் ...அதே சமயத்தில் அச்சமும் வருகிறது......அப்புறம் பஞ்சாபை பழி வாங்க புறப்பட்டு விடுவாரே....

Rate this:
Anban valli - Tirunelveli,இந்தியா
28-ஜூலை-201616:25:39 IST Report Abuse

Anban valli காங்கிரஸ் கைக்குழந்தை முன் தனது 56 இன்ச் மார்பின் வீரத்தை காட்டியவர்,டெல்லியில் வெறும் 3 இஞ்சாக (3/70) சுருக்கி அவமானப்பட்டது பஞ்சாப், கோவா விலும் தொடருமோ என்ற அச்சம் 11 ஆம் ஆத்மி mla கள் கைது. நாட்டிலுள்ள மற்ற கட்சிகளின்( குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலாவது ) mla கள் எல்லோரும் யோக்கியமானவர்களா? அவர்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை என்று அடிவருடிகள் விளக்கினால் ஒப்புக்கொள்கிறேன்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
28-ஜூலை-201618:37:01 IST Report Abuse

Agni Shivaகண்ணா தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம். டெல்லி தேர்தலுக்கு பிறகு எங்குமே தேர்தல் நடைபெற வில்லையா? பிஜேபி வெற்றி பெற வில்லையா? ஏன் இந்த முட்டாள்தனமான எண்ணம்? நிதிஷ் ஆளும் பீஹாரிலும் மற்றும் கான் கிராஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் குற்றம் செய்த பிஜேபி எம் எல் ஏக்களை கைது செய்ய யாராவது தடுத்தார்களா? ஆமாம் ,டெல்லியில் நாடக கம்பெனி எம் எல் ஏக்களை கைது செய்தது பிஜேபி அரசா? உம்மை விடவா சிறந்த அடிவருடி இருக்க முடியும் ? ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
29-ஜூலை-201607:39:21 IST Report Abuse

Anandanஅம்மாஜி, மோடிஜி அடிவருடியாக மட்டுமே இருக்கணும், தெரிஞ்சுக்கோங்க. ...

Rate this:
Silver Star Shilpa Kumar - London,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-201615:03:58 IST Report Abuse

Silver Star Shilpa Kumarநாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல நாராயணா

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X