பதிவு செய்த நாள் :
'அம்ரூத்' நகரங்களில் ராமேஸ்வரம் இணைப்பு:
கலாம் பிறந்த பூமி என்பதால் விலக்கு

ராமநாதபுரம்:''அப்துல் கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால், நகரங்களை மேம்படுத்தும், 'அம்ரூத்' திட்டத்தில் ராமேஸ்வரம் சேர்க்கப்பட்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பெருமிதத்துடன் கூறினார்.

 'அம்ரூத்' நகரங்களில் ராமேஸ்வரம் இணைப்பு:கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால் விலக்கு

ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள, அப்துல் கலாம் நினைவிடத்தில், கலாமின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:

சாதாரண மனிதனும், கல்வியால் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கலாம். இந்த நேரத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த வாரம் அவரை சந்தித்த போது, நினைவகம் அமைக்க கூடுதல் இடம் ஒதுக்க ஒப்புக்கொண்டார்.

கலாம் நாட்டிற்கு ஆற்றிய சிறந்த பணிக்காக, கோவில், மசூதி, தேவாலயத்திற்கு நிகராக அவருக்கு நினைவகம் அமைக்கப்படுகிறது. கலாம் மாறுபட்ட தலைவராக இருந்தார். அவரது தொலைநோக்கு திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன. அவரது திட்டங்களை, பிரதமர் மோடி அரசு முன்னெடுத்து செல்கிறது. கலாமின்

தொலைநோக்கு பார்வை, மோடியிடம் உள்ளது. காசி, ராமேஸ்வரம் நாட்டின் புனித நகரங்கள். கலாம் பிறந்ததால் இந்த பூமி, 'புண்ணிய பூமி' ஆகிவிட்டது.

நாட்டில், நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 500 அம்ரூத்நகரங்களில் ராமேஸ்வரம் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகை இருந்தால் தான் இதற்கு தகுதி. ஆனால், கலாம் பிறந்த மண் என்பதால், விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக, 48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் பயணிகள் தங்குவதற்காக, 53 அறைகளுடன் தங்கும் விடுதி, 23 கோடி ரூபாயில் கட்டப்படும். இதற்கு 'அப்துல் கலாம் விடுமுறை விடுதி' என்ற பெயர் வைக்க உள்ளோம்.நம் நாட்டின் இரண்டு கர்மயோகிகளில், ஒருவர், ராமேஸ்வரத்தில் வாழ்ந்த கலாம். மற்றொருவர், புனித நகரான காசியில் வாழ்கிறார்; அவர் தான் மோடி.

நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் நம் இறப்பு இருக்கும். மாணவர்களிடம் நம்பிக்கை கொண்ட கலாம் உயிர், மாணவர்கள் மத்தியில் பிரிந்தது, இதற்கு உதாரணம்.கலாம் நம் எல்லாருக்கும் சொந்தமானவர். இவ்வாறு அவர் பேசினார்.பாதுகாப்பு துறை செயலர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

-கலெக்டர் நடராஜன், கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயர், குடும்பத்தினர் பங்கேற்றனர்.

கனவை நனவாக்குவோம்

கலாமின், 'விஷன் 2020' கனவை நனவாக்கும்

Advertisement

நாள் வெகு தொலைவில் இல்லை. பிரதமர் மோடி அவரது கனவு, லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். கலாம் நினைவிடம் அமைய, முதல்வர் ஜெ., நிலம் கொடுத்து தேவையான உதவிகளை செய்துள்ளார். கலாம் நினைவகம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.

-மனோகர் பரீக்கர், மத்திய அமைச்சர், பா.ஜ.,

எம்.ஐ.டி.,க்கு கலாம் பெயர்!:

எந்தவித தாமதமும் இன்றி, 'டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகம்' கட்டும் பணிகளை, முடுக்கி விட வேண்டும். கலாம் நினைவாக, சென்னையில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான எம்.ஐ.டி.,க்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்திருந்தேன். அந்த கோரிக்கையை நிறைவேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்டாலின், பொருளாளர், தி.மு.க.,

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru Bharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201615:43:33 IST Report Abuse

Guru Bharanஅவர் உயிரோட இருந்த காலத்துல அவருக்கு என்ன மரியாதை பண்ணுனீங்க?

Rate this:
S.SARAVANAN - RAMANATHAPURAM,இந்தியா
28-ஜூலை-201613:48:34 IST Report Abuse

S.SARAVANANகாந்தி பிறந்த நாட்டில் பிறந்ததை விட கலாம் பிறந்த மண்ணில் பிறந்ததை கௌரவமாக நினைக்கின்றேன்.

Rate this:
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201622:38:41 IST Report Abuse

Saravananஇந்த கமெண்டை பார்த்தால் கலாம் அவர்கள் ரசிக்க மாட்டார்.. ஒருவரை புகழும்போது இன்னொருவருடன் ஒப்பிடுவது தவறு.. கலாம் அவர்களை மதிக்கும் நீங்கள் அவரை போன்ற சிறந்த பண்பாளராய் வளர வாழ்த்துக்கள் ...

Rate this:
Vijay-G - Chennai,இந்தியா
28-ஜூலை-201611:18:48 IST Report Abuse

Vijay-Gகலாம் பிறந்ததால் ராமேஸ்வரம் புனித பூமி ஆகவில்லை ஸ்ரீ ராமரின் பாதம்பட்ட புனித பூமியில் கலாம் பிறந்ததால் கலாம் புனிதனானார்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X