விலைவாசி விண்ணை தொடுகிறது ; கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? ராகுல் | Dinamalar

விலைவாசி விண்ணை தொடுகிறது ; கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? ராகுல்

Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (31)
Advertisement
கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? ராகுல்

புதுடில்லி: ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்போம் என மோடி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என இன்று லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது காங்., துணை தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.

விலைவாசி உயர்வு குறித்து சபையில் ராகுல் மேலும் பேசியதாவது: நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன் பா.ஜ.,வும் மோடியும் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? பண வீக்கத்தை குறைப்போம் என்றனர். குறைத்தார்களா ?

சமீபத்தில் மோடி அரசு ஆண்டு விழா கூடியது. இதில் விலைவாசி உயர்வை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திற்கும் பா.ஜ,. ஆட்சி காலத்திற்கும் விலைவாசியில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. சமையல் எண்ணெய், பருப்பு, பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் உணவு பொருட்கள் பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.

இது வரை பிரதமர் மோடி வாய் திறந்துள்ளாரா ? விலைவாசி உயர்வை கட்டப்படுத்தாமல் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தினால் பலன் ஏதுமில்லை. பிரதமர் மோடிக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன், இந்திய மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டடும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kesigan Karuppiah - chennai ,இந்தியா
29-ஜூலை-201608:40:42 IST Report Abuse
Kesigan Karuppiah ஒரு பக்கம் விலைவாசி விண்ணை தொடுகிறது என்று கத்துவது, விலை வாசி குறைந்தால் விவசாயிகளின் வயிற்றில் அரசு அடிக்கிறது என்று கூப்பாடு போடுவடுவது. இது அரசியல்வாதிகளின் அடிப்படை இலக்க்கணம். காங்கிரஸுக்கும் ப.ஜ.க. வுக்கும் நிறைய வேற்றுமை உள்ளது. ப.ஜ க வில் ஊழல் உள்ளது என்று சொல்லமுடியாத, ஊழல் பற்றி பேச அருகதை இல்லா காங்கிரஸ் தான் விலை வாசி உயர்வு என்று ஓலமிடுகிறது. அப்படி ஒன்றும் விலை வாசி விண்ணை தொடுவதாக தெரியவில்லை. வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்குள் தான் உள்ளது. பருப்பு விலை கூட கட்டுக்குள்தான் உள்ளது. மக்களின் குறைகளை கேட்பதற்கும் அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் அரசின் செயல் பாட்டில் உண்மையான அக்கறை இருப்பதை, வெட்டி பேசாத மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். மோடி கூறியது போல் 'அரசு இயந்திரத்தை பயன்படுத்தி யாரெல்லாம் ஏய்த்து பிழைக்க வழியில்லாமல் இருக்கிறார்களோ, அவர்களே எனது அரசை குறை கூறுகிறார்கள்' என்பதைத்தான் ராகுல் பேச்சில் இருந்து நாடு புரிந்து கொண்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
28-ஜூலை-201622:07:40 IST Report Abuse
Sivan Mainthan விஜய் டிவில கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு தேர்வு நடக்குது, தம்பி ராகுலுக்கு இடமில்லையா? நாங்கள் இதை எதிர்த்து அண்ணன் இளங்கோவன் தலைமையில் கேவலமாக திட்டப்போகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
28-ஜூலை-201621:00:17 IST Report Abuse
HSR இப்போது காங்கிரஸ் ஆண்டிருந்தால் பருப்பு நாம் கற்பனையில்தான் இருக்கும் .என்னமோ பேச சொன்னதை பேசிட்டு போகவேண்டியதுதான் .உங்க கூட்டணி தானை பொருட்ட்களின் விலைவாசி பற்றி கேட்ட பொது தி .நகரில் போய்ப்பார் கூட்டம் அழைப்மோதுது .வெங்காயம் 120 முதல் 160 வரை விற்கப்பட்டபோது பெரியாரிடம் போய்க்கேள் என்றவர்தானே சும்மாபேச கூடாது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X