சுடப்பட்டது புர்கான்வானி என பாதுகாப்புபடையினருக்கு தெரியாது; மெகபூபா பேட்டி

Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (18)
Advertisement
சுடப்பட்டது புர்கான்வானி என பாதுகாப்புபடையினருக்கு தெரியாது; மெகபூபா பேட்டி

ஸ்ரீநகர்: சுட்டுக்கொல்லப்பட்டது புர்கான்வானி தான் என பாதுகாப்புபடையினருக்கு தெரியாது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த 9-ம் தேதி பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன் புர்கான்வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று வரை அமலில்உள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பக்கத்து நாடான பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கி இந்தியாவின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, கூறியது, பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் புர்கான் வானி என பாதுகாப்புபடையினருக்கே தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தால் புர்கான் வானி உயிருடன் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றார்.

துணை முதல்வர் நிர்மல்சிங் கூறியது,காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தினசரி நடப்பது ஒன்று தான். அது போன்று தான் சம்பவம்நடந்தது. இதில் புர்கான்வானி அங்கிருந்தார் என போலீசாரும் தெரிவிக்கவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
29-ஜூலை-201610:21:53 IST Report Abuse
Divaharan இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் . அவர்களையும் போட்டு தள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
29-ஜூலை-201609:58:50 IST Report Abuse
Durai Ramamurthy புர்கான்வானி என தெரிந்தால்தான் சுட்டுக்கொன்றோம் என பாதுகாப்புபடையினர் கூறினால் என்ன செய்வீர்கள். தீவிரவாதிகளில் கூட வேண்டப்பட்டவர் வேண்டபப்படாதவர் என்று பாகுபாடு காட்டாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
29-ஜூலை-201606:36:05 IST Report Abuse
annaidhesam ஒரு பயங்கரவாதி..நாட்டிற்கு கேடு விளைவித்த ஒருவனை சுட்டு கொன்றதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X