பதிவு செய்த நாள் :
அமளி
ஆதார் எண் கட்டாயமாக்க கூடாதென எதிர்கட்சிகள்...
:எம்.பி.,க்கள் கோஷத்தால் ராஜ்யசபா ஒத்திவைப்பு

'ஓய்வூதியம், ரேஷன் பொருட்கள், சமையல் 'காஸ்' போன்ற, அரசின் சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது' என, வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா, நேற்று பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

 ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாதென எதிர்க்கட்சிகள் அமளி:எம்.பி.,க்கள் கோஷத்தால் ராஜ்யசபா பலமுறை ஒத்திவைப்பு

நேற்று ராஜ்யசபாவில் அலுவல்கள் துவங்கியதும், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளின், எம்.பி.,க்கள் எழுந்து, 'ஆதார் அட்டை குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என்றனர். துணை தலைவர் குரியன்,''அதற்கு, தற்போது அனுமதியில்லை,'' என்றார். இதையடுத்து, சபையில் அமளி ஏற்பட்டது. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போகவே, முக்கிய தலைவர்கள் மட்டும் பேச, துணைத் தலைவர் குரியன் வாய்ப்பளித்தார்.

அப்போது பேசிய சமாஜ்வாதி எம்.பி., ராம்கோபால் யாதவ், ''ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, மத்திய அரசின் சலுகைகள், மானியங்கள் என எதையும் தர வேண்டாமென, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 40 சதவீத மக்களுக்கு, ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், இதுபோன்ற அறிவுறுத்தல், ஏழைகளை பாதிக்கும்,'' என்றார்.
ஏழைகளை பாதிக்கும்

திரிணமுல் எம்.பி., டெரக் ஓபிரையன், ''கூட்டாட்சி தத்துவத்தை, பா.ஜ., அரசு பேசுகிறது. ஆனால், மாநில அரசுகளை ஆலோசிக்காமலேயே, மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆதார் அட்டை கட்டாயமும் அதில் ஒன்று. இதை ஏற்க முடியாது,'' என்றார்.
பிஜு ஜனதாதள எம்.பி., துர்க்கி, ''ஒடிசாவில், 20 சதவீதம் பேருக்கு, ஆதார் அட்டை இல்லை. எனவே, மத்திய அரசின் அறிவுறுத்தல், ஏழைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

ஐக்கிய ஜனதாதள எம்.பி., சரத்யதாவ்,

''இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகள், ஏழைகளை பாதிக்கும் என, மத்திய அரசுக்கு தெரியாதா? ஏழைகளின் உணர்வுகளை மதிக்காமல், அதிகாரிகள் வாயிலாக உத்தரவு போடுவதை, ஏற்க முடியாது,'' என்றார்.

சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால், ''ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை நிறுத்த வேண்டும்; அவர்களின் ஓய்வூதியத்தையும் நிறுத்த வேண்டும்; சமையல் எரிவாயு மானியத்தையும்வழங்க கூடாது. இவைதான் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு போட்டு உள்ள மூன்று உத்தரவுகள்; இதை ஏற்கவே முடியாது,'' என்றார்.

காங்கிரஸ் எம்.பி., ராஜிவ் சுக்லா, ''68 சதவீத மக்களுக்கு, கடந்த ஆட்சியிலேயே, ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டன. இந்த அரசு வந்தபின், ஆதார் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதே, இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்,'' என்றார்.

நாள் முழுவதும்...:

பெரும் அமளிக்கு மத்தியில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, தர்மமேந்திர பிரதான் என இருவர் விளக்கம் அளித்தும், 'ஆதார் அட்டை விஷயத்தில், மத்திய அரசு, வேண்டுமென்றே குழப்புகிறது; அதை ஏற்க முடியாது. ஏழைகளை பெரிதும் பாதிக்கும் ஆதார் அட்டை திட்டம் குறித்து, விரிவான விவாதம் நடத்த வேண்டும்' என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இதையடுத்து, சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின், சபை கூடியதும் கேள்வி நேரத்தை நடத்த, சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி முயன்றார். மீண்டும் அமளி துவங்கவே, முதலில், 10 நிமிடங்கள் ஒத்தி வைத்த அவர், பின், அமளி கட்டுக்கடங்காமல் போகவே, முழுவதுமாக சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்த அமளியில், அ.தி.மு.க.,வும், - தி.மு.க.,வும், அமைதி காத்தன. இந்த இரு கட்சிகளின் எம்.பி.,க் களும் விவாதத்தில் பங்கேற்கவில்லை

கட்டாயமல்ல;இருந்தாலும்…!:

அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:இதுவரை, 100 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், ஆதார் அட்டை முழுவதுமாக வழங்கப்பட்டு உள்ளன. எனவே, மற்ற மாநிலங்களிலும், ஆதார் அட்டை, முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை

Advertisement

முடிவுக்கு கொண்டு வரவே, மத்திய அரசின் மானியங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், நேரடி பண பரிவர்த்தனை திட்டம் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின் விளைவாக, இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, பெட்ரோலியத்துறையின் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை என்பது கட்டாயம் அல்ல; தேவைப்பட்டால், இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

மானியம் ரத்தாகாது:


பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில்,''நாட்டில், 85 சதவீதம் பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, மானியம், மூன்று மாதங்களுக்கு மட்டுமே நிறுத்தி வைக்கப்படும். அந்த தொகை, தனியாக எடுத்து வைக்கப்படுமே தவிர, அந்த மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது,'' என்றார்.

ஆதார் அட்டைகளை பெறும் இடங்களுக்கு, நேரில் சென்று கூட வாங்க முடியாத நிலையில் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு தேவை. அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கி, அதை உறுதி செய்த பின்னரே, மத்திய அரசு எந்தவொரு முடிவுக்கும் வர வேண்டும்.

டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., - எம்.பி.,

நாட்டிலேயே, ஆதார் அட்டைகளை அதிக அளவுக்கு வழங்கிய மாநிலம், தமிழகம் தான். இதற்காக, தமிழக அரசை பாராட்டி, பரிசு கூட வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கட்டாயமா என்பது குறித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த பிரச்னைக்கு அதுவே போதுமானது.
-நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., - எம்.பி.,
- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஜூலை-201614:53:53 IST Report Abuse

Pugazh V4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி இடம் மாற்றம், சொந்த ஊரில் கால் காணி நிலமோ வீடோ இல்லை. எங்கே மாற்றமோ அங்கே வாடகை வீட்டில் வாழ்க்கை. பிள்ளைகள் வேறு நகரங்களில் படிக்கிறார்கள். என்ன சொல்லி எப்படி ஆதார் எடுப்பது. எந்த ஆபீஸிலும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். பி ஜெ பி ஆபீசில் மட்டும் தான் இன்னும் கேட்கவில்லை. வாசக நண்பர்கள் யாராவது எடுத்துத் தர உதவினால், சர்வீஸ் சார்ஜ் கொடுத்துவிடுகிறேன், ஆதார் எடுத்து தருகிறீர்களா யாரேனும்? அரசியல் அல்ல, மனம் நொந்து எழுதுகிறேன். தினமலர் உதவினாலும் நன்றி.

Rate this:
Gopi - Chennai,இந்தியா
29-ஜூலை-201618:10:24 IST Report Abuse

Gopiவங்கி புத்தகம் (உங்கள் சம்பள கணக்கோடு இணைந்தது) மற்றும் தற்போதைய குடி இருக்கும் வீட்டின் ஆவணங்கள் போதும். உங்களுக்கு கைபேசி, காஸ் இணைப்பு, போன்றவை இருக்கும். அப்படியெனில் ஆதார் கிடைக்க தடை இல்லை. வலைத்தளத்திலேயே தொடர்பு கொள்ளலாம் ...

Rate this:
சாமி - மதுரை,இந்தியா
30-ஜூலை-201600:53:50 IST Report Abuse

சாமிவலைத்தளத்திலேயே தொடர்பு என்னைக்கு கிடைக்க... அதுவரை எல்லா அரசு உதவி மற்றும் அனைத்து வேலைகளும் நிருத்தி வைக்க முடியுமா ? ...

Rate this:
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
29-ஜூலை-201614:41:45 IST Report Abuse

HSRஎன்னது இவைங்க ஆட்சியில் 68 % அண்டப்புளுகு ஆகாசப்புளுகு ,, எனக்கு என் குடுமபதற்கும் மோடி பொறுப்பேற்ற பின் தான் பல்லயில் வைத்தே எளிமைப்படுத்தி மிக ஈசியாக நடைமுறைப்படுத்தி வீட்டுக்கே அனுப்பி வைத்தார்கள் ...

Rate this:
கார்த்திக் சித்தன் - சிவலோகம்,இந்தியா
29-ஜூலை-201613:20:28 IST Report Abuse

கார்த்திக் சித்தன்ஆதார் கட்டாயமாக்குதலினால் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளை இது பொறுக்காதே.

Rate this:
vadivelu - chennai,இந்தியா
30-ஜூலை-201601:56:54 IST Report Abuse

vadiveluஅன்னியர்களை உள்ளே விட்டு வாக்கு சேகரித்து வந்தவர்கள் எதிர்க்கிறார்கள்.அவர்களின் வாக்கு வங்கி சரிந்து இருப்பதால் இன்னமும் பலரை உள்ளே விட பார்க்கிறார்கள்.இவர்களு க்கு நாட்டை பற்றி கவலை இல்லை. ...

Rate this:
Tamilan - Chennai,இந்தியா
31-ஜூலை-201614:41:50 IST Report Abuse

Tamilanஆதார் வாங்க எத்தனை வழிமுறைகள் உள்ளது என்பது ஊடுருவிகளுக்கு தெரிந்திருக்கும். நம் நாட்டின் மைந்தர்களால் தான் அணுக முடியாது.ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், வாங்க முடியாதவர்கள், தெரியாதவர்கள் யார் என்பதை கணக்கெடுப்பு நடத்தி அவர்களின் குறைகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X