புதுடில்லி:அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது:
மத்தியில், தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறுகிறது.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி, போலியான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். பருப்பு
குறையும் தேதியையும் அவர் அறிவிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது,
'நாட்டின் காவல்காரனாக என்னை நியமியுங்கள்' என்றார். ஆனால், இப்போது,காவல்காரன் பதில் பேச மறுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
ஜெட்லி பதிலடி:
பிரதமர் மோடியை தாக்கி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசிய போது அவர் சபையில் இல்லை; பின், விவாதத்தில் பங்கேற்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பணவீக்கத்தை, மோடி அரசு குறைத்துள்ளது. பருப்பு விலை உயர்வு கவலையளிக்கக் கூடியது தான். ஆனால், தேவைக்கும், 'சப்ளை'க்கும் உள்ள இடைவெளியை குறைக்க, அரசு,பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும்
வகையில் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சவால்கள் இருந்தாலும்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மத்திய அரசு பின்பற்றி வரும் கொள்கைளால் அன்னிய
தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஹர் ஹர் மோடி,கர் கர் மோடி - எங்கும் மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மோடி' என்று கோஷமிட்டீர்கள். தற்போது ஒரு கிராமங்களிலும், 'அர்ஹார் மோடி - துவரம் பருப்பு வேண்டும் மோடி' என்ற கோஷம் எழுந்துள்ளது.
ராகுல், காங்., துணைத் தலைவர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (51)
Reply
Reply
Reply