சென்னை:'உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற, அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்' என, அ.தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சியினருக்கு, முதல்வர் ஜெயலலிதா
வேண்டுகோள் விடுத்தார்.
தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் உள்ளிட்ட
பல்வேறு கட்சிகளில் இருந்து, 31,834 பேர், நேற்று, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அருந்ததி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வலசை ரவிச்சந்திரன், தன் கட்சியை கலைத்து விட்டு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசுகையில், ''என் தலைமை யிலான அரசு, மக்களுக்கு ஆற்றி வரும்
மகத்தான பணிகள் பலவற்றை அறிந்திருப்பீர்.
அவற்றை நீங்கள், மக்களுக்கு
எடுத்துரைக்க வேண்டும். விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., மகத்தான வெற்றியை
பெறும் வகையில், நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply