எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதாயம்?
ஆதார் எண் அரசுக்கு ஆதாயம்?

ஆதார் எண் மற்றும் அட்டை இல்லாதோருக்கு, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசு சலுகை களை நிறுத்தும்படி, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பார்லி., யில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி உள்ளன. இந்த விவகாரத்தில், சட்டம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என, பல்வேறு பிரச்னைகள் இடம் பெற்றுள்ளன.

 ஆதார் எண் அரசுக்கு ஆதாயம்?

'ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பின்னும், மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்துள் ளது, நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி விடும். இந்த தவறை, தற்போது ஆட்சியில் உள்ள மோடி அரசும், முந்தைய காங்., அரசும் செய்துள்ளன.

இந்த சிக்கலால், சில பிரச்னைகளில், 'நீதிமன்ற தீர்ப்புகளை மாநில அரசுகள் மதிக்கவில்லை' என கூறி, மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்கும், தார்மீக உரிமையையும், மத்திய அரசு

இழந்து விட்டது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் களில், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மாநில அரசுகளே வழங்குகின்றன. இதற்காக, மத்திய அரசு, பணம் மற்றும் பொருள் உதவி செய்கிறது.

தற்போது, அதுபோன்ற திட்டங்களில்சிலவற்றை, மத்திய அரசே, தன் திட்டமாக முன்னெடுத்தும் வருகிறது. அதன் காரணமாகவே, 'மாநில அரசு களை ஆலோசிக்காமல், அதற்கான சட்டத்திட்டங் களை, மத்திய அரசே மாற்றி அமைக்கலாமா' என்ற கேள்வி இங்கே எழுகிறது. அரசியல் ரீதி யாக, மத்தியில் ஆளும் பா.ஜ., மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான காங்., ஆகிய இரு கட்சிகளும், ஆதார் திட்டத்தை வரவேற்றுள்ளன.

ஆனால், அவை, தாங்கள் ஆளும் மாநிலங்களில் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கவில்லை. பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அந்த அரசுகள், ஆதார் திட்டத்தை எதிர்க்கவில்லை; அதேநேரம், அதை, அரசு சலுகைகள் பெறுவதற்கு கட்டாயமாக்கினால், ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

பொருளாதாரரீதியாக, ஆதார் போன்ற திட்டங்களின் அடிப்படையில், அரசு சலுகைகள் பெறுவது கட்டாயமானால், மேல்தட்டு மற்றும் மத்தியதர மக்கள், இந்த சலுகைகளை பெற முன்வரமாட்டார்கள் என்றும், அதற்காக முயற்சி செய்யமாட்டார்கள் என்றும் கருதப்படுகிறது.

Advertisement

உதாரணமாக, சமையல், 'காஸ்' மானிய திட்டத் தின் கீழ் பயன்பெற, வங்கி கணக்கு துவங்கி, விபரங்களை காஸ் விற்பனை செய்யும் ஏஜன்சிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது; விளைவு, மேல்தட்டு மற்றும் மத்தியதர மக்களில் பலர், இந்த சலுகையை பெறவில்லை.

ஆனால், இதை கவுரவ பிரச்னையாக அவர்கள் கருதவில்லை. மாறாக, இது அவர்களின் பொறுமையின்மை மற்றும் முயற்சியின்மை யின் வெளிப்பாடு எனலாம். ஆதார் திட்டத்தில் சேராதோர், அரசு சலுகைகளை இழக்க நேரிட் டால், அதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு லாபமே அன்றி நஷ்டம் இல்லை. ஆனால், அரசியல் ரீதியாக இந்த லாப- நஷ்ட கணக்கு குறித்து, தேர்தல் நேரத்திலேயே விடை தெரியும். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Joe - Trichy,இந்தியா
29-ஜூலை-201619:22:20 IST Report Abuse

Joeவிவசாயிகள் என்கிற பெயரில் நிலக்கிழார்கள் மானியத்தை அனுபவிப்பதை அரசு தடுக்க முனையுமா? முடியவே முடியாது. அரசின் செயல்பாடுகள் அவர்களின் ஓட்டு வங்கியை சார்ந்ததே அன்றி மக்கள் மற்றும் நாட்டு நலனை சார்ந்தது அல்ல..

Rate this:
Divaharan - Tirunelveli,இந்தியா
29-ஜூலை-201616:37:27 IST Report Abuse

Divaharanமக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்கும்

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஜூலை-201614:27:07 IST Report Abuse

Nallavan Nallavanஆதார் பற்றிய இந்தக் கட்டுரை குழப்பமோ குழப்பம் .... இதற்கு ஒரு கட்டுரையே தேவையில்லை .... மானியங்களை ஒழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது ஆதார் .... அது காங்கிரஸ் ஆகட்டும் .... காங்கிரஸ் கொண்டு வரும்போது அதை எதிர்த்த பாஜக ஆகட்டும் .....

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X