சம்பவம் செய்தி

தமிழ்நாடு

66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

Added : ஜூலை 29, 2016 | கருத்துகள் (29)
Advertisement
66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன. இதுவரை 65 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 15, 16வது நுழைவு வாயில் அருகே உள்ள 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இது அங்கு நடைபெறும் 66வது விபத்து. இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Kumar - chennai,இந்தியா
29-ஜூலை-201620:04:15 IST Report Abuse
Mohan Kumar அதில் 10 பேர் செத்தால் தான் நாங்கள் நடவடிக்கை பற்றி யோசிப்போம். மீண்டும் மீண்டும் தனியாருக்கு என்ன மட்டமாக செய்தாலும் வேலை தருவோம் எங்களுக்கு நல்ல பிச்சை போடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Sharbudeen Mohamed Kassim - Kuala lumpur,மலேஷியா
29-ஜூலை-201618:26:02 IST Report Abuse
Sharbudeen Mohamed Kassim 66 முறை இத்தனை முறை விழுந்தது என கணக்கு வைத்துக்கொள்ள வெட்கமாக இல்லையா, மத்திய அரசின் விமான நிலைய கட்டிட பராமரிப்புக் குழுமத்திற்கு? இந்தியா உலகத்தின் முதன்மை பொருளாதார வல்லரசு நாடுகள் வரிசையில் 7 ஆம் இடத்தில் இருந்து என்ன செய்ய? ஒரு முறை விபத்து நேர்ந்தால் உடனடியாக அது மறுபடி நிகழா வண்ணம் என்ன செய்ய வேண்டுமோ அதை என்ன விலை கொடுத்தேனும் சரி செய்ய வேண்டும். இது மக்களின் அரசு, மக்களால் அரசு மற்றும் மக்களுக்கான அரசு என வாய் வார்த்தை ஜாலங்கள் முக்கியமல்ல. செயல்படும் அரசு தான் இப்போதைய உடனடி தேவை.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-ஜூலை-201615:08:07 IST Report Abuse
தமிழர்நீதி 66 முறை கண்ணாடி வீழ்கிறது. ஏதாவது ஒரு நீதிபதி மீது கண்ணாடி வீழ்ந்தால் தான் தானாக முன்வந்து வழக்கு பதிந்து, இந்த இடியும் மாய கண்ணாடி பொருத்திய ஒப்பந்தக்காரர்மீது சட்டம் பாய்ந்திட வழக்கு தொடுப்பார்கள் போலிருக்கு . செய்தி படித்து வழக்கு தொடர மனசு வர மாட்டேன்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X