பதிவு செய்த நாள் :
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பிரச்னை:
ஜெட்லியுடன் அமைச்சர் வாக்குவாதம்

புதுடில்லி:ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி கடும் வாக்குவாதம் செய்தார்.

 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பிரச்னை:ஜெட்லியுடன் அமைச்சர் வாக்குவாதம்

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான, ஆந்திரா மறுசீராய்வு சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது.

அப்போது, 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி உட்பட, பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தி பேசினர்.
தயாராக உள்ளது:
இதற்கு பதிலளித்து, மத்திய நிதியமைச்சர்

அருண் ஜெட்லி பேசியதாவது: இந்த சட்டத்தின்படி ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,சபையில் அறிவித்தார். ஆனால், சட்டத்தில் அது இடம்பெறவில்லை. அந்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராயப்படுகிறது.

தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில், ஆந்திராவின் பொருளாதார சிக்கலை தீர்க்க, மாநில அரசுக்கு கைகொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி பேசியதாவது:

ஆந்திராவுக்குஅளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த, கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும். ஆந்திரா பிரிவினை சட்ட மசோதா, தொலைநோக்கில்லாமல் அரைகுறையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசும்,

Advertisement

எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வுமே காரணம்.

பொருளாதார சிக்கல்:
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அப்போது, இதற்கான காலத்தை ஐந்தாண்டில் இருந்து, 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று, தற்போது அமைச்சர்களாக உள்ள அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு வலியுறுத்தினர். அனைத்து வாக்குறுதிகளை யும் உடனடியாக நிறைவேற்றி, ஆந்திராவை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு அமைச்சரின் பேச்சை, மற்றொரு அமைச்சர் இடைமறித்து பேசியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டது, ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
30-ஜூலை-201615:22:39 IST Report Abuse

Swaminathan Chandramouliஇதியாவிலேயே பெரும் பணக்காரர்கள் இருக்கும் மாநிலம் ஆந்திரா தான்.கனிம சுரங்கங்கள், புகை இலை இவற்றால் அங்கு பணம் கொழிக்கிறது. லஞ்சம் கொடுத்து மெடிக்கல் கல்லூரிகளில் சேர்ந்து அரை குறை டாக்டர்களாக வெளியே வந்து ஏராளமாக பாம் சம்பாதிக்கிறார்கள். ஒரு முறை ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் இதய சிகிச்சை பெற வந்த நோயாளியின் மார்பின் வலது பக்கத்தை அறுத்து அங்கு இதயத்தை தேடினார்

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
30-ஜூலை-201614:12:05 IST Report Abuse

VOICEதமிழ்நாட்டை ஏமாற்றி கர்நாடகாவை ஏமாற்றி இறுதியாக இந்தியாவை ஏமாற்ற போட்ட திட்டம் இது. இவங்க அடிச்சு பிரிஞ்சிப்பாங்க சிறப்பு அந்தஸ்து தரணுமாம். வேணும்னா சேர்ந்துக்கங்க யார் வேண்டாம் என்றார்கள். சிறப்பு அந்தஸ்து எதற்கு என்றால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கம்பெனி தங்கள் மாநிலத்திற்கு இழுப்பதற்கு குறுக்கு வழியில் அடைய போட்ட திட்டம். தென் இந்தியாவை கெடுக்கும் அனைத்து வழிகளிலும் ஆந்திர சேர்ந்த பெரும்பாலோர் செயல்படுகின்றனர். சத்யம் ராஜு மற்றும் மல்லையா போன்ற அதிகமாக ஏமாற்றி சேர்த்த சொத்துகள் பேங்க் லோன் ஏமாற்றிய வர்கள் சேர்த்த சொத்துக்கள் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் பினாமி கல்லூரி மற்றும் சொத்துக்கள் அனைத்தும் இங்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு இது வரை ரெய்டு செய்வது இல்லை. இதனால் அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இவர்கள் சிலர் செய்யும் அட்டுழியம் ஏராளம். ஆனால் ஆ தி மு க ஆகட்டும் அல்லது தி மு க ஆகட்டும் வாயே திறப்பதில்லை இதன் ரகசியம் ஏன் என்று இவர்களுக்கு மட்டுமே தெரியும். விஜயகாந்த் ஆந்திரா மணவாடு கொடுக்கும் நிதியால் நடத்தும் கட்சி, சொல்ல தேவையே இல்லை. தமிழ்நாடு தமிழர்கள் விட அடுத்தவனுக்கு தான் அரசியல் வேலைவாய்ப்பு முதல் அனைத்துக்கும் முதல் உரிமை. வரும் வருடங்களில் ஒரு ஒரு அரசு மற்றும் தனியார் துறைகளில் என்ன நிலைமை என்று தெரியவில்லை இதை தவிர்க்க வேண்டும் என்றல் நீங்கள் எவ்வளவு படித்தவராக இருப்பினும் நாம் ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவதை தவிர்த்து தமிழ் நாட்டை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் முதற் கொண்டு தமிழில் பேச எழுத வேண்டும் தேவை படும் இடங்களில் அனைத்தும். இல்லை என்றால் சென்னை ஆந்திரா தேசம் ஆகிவிடும் அடுத்த 3 ஆண்டுகளில்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-ஜூலை-201614:08:19 IST Report Abuse

இந்தியன் kumarஆந்திராவில் அரசு செயல்படுகிறது ,சந்திர பாபு நாயுடு மிக சிறந்த நிர்வாகி , சிறப்பு அந்தஸ்து இல்லாமலே மாநிலத்தை முன்னேற்றி விடுவார்.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X