பதிவு செய்த நாள் :
'மரண தண்டனையை
ரத்து செய்யும் எண்ணமில்லை'

புதுடில்லி:''மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் எதுவும், அரசுக்கு இல்லை,'' என, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறினார்.

 'மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணமில்லை'

ராஜ்சபாவில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, 'மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க., - எம்.பி. சிவா, ''மரண தண்டனை அமலில் இருந்தும், நாட்டில்,

கொலை உட்பட பல கடும் குற்றங்களை தடுக்க முடியவில்லை. அதனால், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்,''என்றார்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், தி.மு.க.,வைச் சேர்ந்த இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் உட்பட பலரும், 'மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.

காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த பாஸ்கர் ரபோலு கூறுகையில், ''கொடூர குற்றங்களில் ஈடுபட்ட வர்களுக்கு, மரண தண்டனை தான் சரியான தீர்ப்பு,''என்றார்.

விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ''இப்போதுள்ள சூழ்நிலை
யில், மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம், அரசுக்கு இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மிகவும் அரிதிலும் அரிதான குற்ற வழக்குகளில்

Advertisement

மட்டுமே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது,'' என் றார்.இதையடுத்து, மசோதாவை வாபஸ் பெறும்படி, ராஜாவிடம், ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் கூறினார். ஆனால், ராஜா மறுத்துவிட்டார்.

இதையடுத்து, குரல் ஓட்டு மூலம், மசோதா நிராகரிக்கப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
30-ஜூலை-201619:56:52 IST Report Abuse

Balagan Krishnanஇந்த நாடு நலம் பெறவேண்டும் என்றல் இஸ்லாமிய நாட்டு தண்டனை இருக்கவேண்டும் தவறு செய்த மிக குறுகிய காலத்தில் தண்டனை கொடுக்கப்படவேண்டும்

Rate this:
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
30-ஜூலை-201617:45:57 IST Report Abuse

Durai Ramamurthyமரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் எதுவும், அரசுக்கு இல்லை, ஆனால் பிற நாடுகளில் இந்தியருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் தடுத்து நிறுத்திவிடுவோம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
30-ஜூலை-201616:04:29 IST Report Abuse

ganapati sbகுற்றம் சாட்டப்பட்டவருக்கு தன் தரப்பு வாதத்தை வைக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து சட்டத்தின் படியே மிகவும் ஆழமாக விசாரிக்கப்பட்ட பின் கவர்னர் ஜனாதிபதி கருணைமனு நிராகரித்த பின்னரே நமது நாட்டில் மரண தணடனை வழங்கப்படுவதால் கொடூர குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அமலில் இருக்க வேண்டும்

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X