அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கேலி, கிண்டல், அநாகரிகம்:
தி.மு.க.,வுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை

சென்னை:''தி.மு.க.,வினரின் அநாகரிகமான செயல்பாடுகள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அறிவித்தார். சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

 கேலி, கிண்டல், அநாகரிகம்:தி.மு.க.,வுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: நேற்று நடந்த பிரச்னையில், அமைச்சர் ஓ.எஸ்.மணி யன் பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தி னோம். இன்று தீர்ப்பு தருவதாக தெரிவித்தீர்கள்; தீர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சபாநாயகர்: தீர்ப்பை கூறுகிறேன்; பொறுமையாக இருங்கள். சபை கூடியதும் சொல்கிறேன் என்று நான் கூறவில்லை. பதில் கூறவில்லை

ஸ்டாலின்: கடந்த, 25ம் தேதி, அ.தி.மு.க., உறுப்பினர் ராஜன் செல்லப்பா; 27ம் தேதி, தென்னரசு ஆகியோர் பேசியதில் சிலவற்றை நீக்கும்படி கோரினோம். அவற்றை படித்து பார்த்து தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தீர்கள். இதுவரை, தீர்ப்பு வழங்கவில்லை. நேற்றைய சம்பவத்திலும் தீர்ப்பு வழங்குவதாக கூறி, இன்னமும் பதில் கூறவில்லை.

சபாநாயகர்:தீர்ப்பு கூறுகிறேன்;சபை


நடவடிக்கை துவங்கட்டும்.ஸ்டாலின்: நேற்றே தெளிவாகக் கூறினோம் இப்பிரச்னையில் தீர்ப்பு வழங்காவிட்டால், நிதி அமைச்சர் பதிலுரையை புறக்கணிப்போம் என, கூறினோம்.

நீங்களும் தீர்ப்பளிப்பதாக கூறிவிட்டு, தற்போது காலம் கடத்துவதை ஏற்க முடியாது.

சபாநாயகர்: இப்போதே தீர்ப்பு வழங்க வேண்டும் என,நீங்கள் வற்புறுத்த முடியாது; பொறுமையாக இருங்கள்.இவ்வாறு சபாநாயகர் கூறியதும், தீர்ப்பு கூறாததை கண்டித்து, நிதி அமைச்சரின் பதிலுரையை புறக்கணிப்பதாக கூறி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின், சபாநாயகர் கூறியதாவது:

எதிர்க்கட்சி தலைவரும், துணைத் தலைவரும் என் அறைக்கு வந்து பேசிய போது, அவர்கள் கட்சி உறுப்பினர் அன்பழகன், என்னை ஒருமையில் பேசினார்; அதை பொறுத்துக் கொண்டேன். நேற்று, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை அருகே வந்து என்னை ஒருமையில் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், ரங்கநாதன் ஆகியோர் அநாகரிகமான முறையில் கை சைகை காண்பிக்கின்றனர். மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அமைச்சர்கள் பேசும் போது கேலியும், கிண்டலும் செய்கின்றனர். சபையை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.

சபாநாயகராக என்னை தேர்வு செய்த போது, 'நடுநிலை தவறாமல், தராசு போல் செயல்பட

Advertisement

வேண்டும்' என, முதல்வர் கூறினார்; அதை செயலாற்றி வருகிறேன். ஆனால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏக வசனத்தில் பேசுகின்றனர்.

கண்டிக்கத்தக்கது: தனிப்பட்ட முறையில் என்னை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்க வில்லை. ஆனால், சபாநாயகர் என்ற பதவியின் அந்தஸ்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கூறுகிறேன். அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

சபையில் சூடான விவாதம் நடக்கும் போது, ஆளுங்கட்சியினரை உட்காரும்படி கூறினால் உடனே அமருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும், அவர்கள் கட்சி உறுப்பினர்களை துாண்டி விடுகின்றனர்; சபையை உதாசீனப்படுத்துகின்றனர்.

என்னை நிர்பந்தம் செய்கின்றனர்; அவர்கள் எதிர்பார்க்கும் சொல்லை கூற வேண்டும் என்கின்றனர்; சபாநாயகரை யாரும் வற்புறுத்த முடியாது. இதுபோன்ற செயலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டால், சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு சபாநாயகர் எச்சரித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangaraj - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201622:13:19 IST Report Abuse

RangarajMathippirkuriya sabanayagar Avargale pesamal sattasabai anaithu nikalchigalayum neradiyaga oliparppungal

Rate this:
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
30-ஜூலை-201621:15:46 IST Report Abuse

Manoharan Prushothamanசட்ட சபைக்கு வெளியே தி மு க தலைவரு கேக்குற கேள்வியை சபைக்குள்ளே தி மு க காரங்க பேச மாட்டேங்கிறாங்க மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்லவில்லை தி மு க மீதான எதிர்பார்ப்பு வீண்

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
31-ஜூலை-201605:04:26 IST Report Abuse

Panneerselvam Chinnasamyசட்ட சபையில் அன்றைய சப்ஜெக்ட் மேட்டர் பத்தித்தானே பேச முடியும்,...அப்படியே தி மு க காரங்க ஏதாவது அவசர பிரச்சசினை இருந்து அதை பற்றி விவாதிக்க அப்ளிகேஷன் கொடுத்தாலும் அதை சபாநாயகர் ஏற்று கொள்வதில்லையே... ...

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
30-ஜூலை-201619:01:57 IST Report Abuse

Paranthamanநேற்று, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை அருகே வந்து என்னை ஒருமையில் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், ரங்கநாதன் ஆகியோர் அநாகரிகமான முறையில் கை சைகை காண்பிக்கின்றனர். மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அமைச்சர்கள் பேசும் போது கேலியும், கிண்டலும் செய்கின்றனர். செம்மண் திருடர் பொன்முடி சபாநாயகரிடம் அறைக்குள் சென்று ஒருமையில் பேசியது சரியா. மின்சாரத்தை போதிய அளவு உற்பத்தி செய்யாமல் வெத்துவேட்டு விளம்பரங்களில் அதை வீணடித்து மின் துண்டிப்புக்கு வழி செய்து நாட்டு மக்களை இருட்டில் மூழ்கடித்தனர் புரட்சி தலைவி அம்மா வந்தபின் அவரது துரித நடவடிக்கையால் அது தற்போது நீங்கியுள்ளது. இது அவரது நல்ல அரசியல் நிர்வாகத்திற்கு ஒரு சான்று. இவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நாட்டு மக்கள் கெரசின் விளக்கில் தான் வாழ்க்கையை நடத்தி இருப்பார்கள்.

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X