அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சந்திக்க தயார்: ஸ்டாலின் சவால்!

சென்னை: சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையை சட்டப்படி சந்திக்க உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 சந்திக்க தயார்: ஸ்டாலின் சவால்!

சட்டசபைக்கு வெளியே, எதிர்க்கட்சியினர் அளித்த பேட்டி:

தி.மு.க., - ஸ்டாலின்: தி.மு.க., ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சட்டவிதிகளை பின்பற்றி, முறையாக செயல்படுகின்றனர். சபாநாயகர், சர்வாதிகாரி போல் செயல் படுவது வேதனையாக உள்ளது.

சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட போது, 'நாங்கள்

எதிர்க்கட்சியாக இருப்போம். எதிரி கட்சியாக இருக்க மாட்டோம்' என, கூறினேன். ஆனால், அவர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை.
சட்டசபையில், நேற்று முன்தினம், துரைமுருகன் பேசும் போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எழுந்து, ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு பதிலளித்து துரைமுருகன்கூறியது சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. அமைச்சர் கூறியதையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

நாளை தீர்ப்பளிக்கிறேன் என்றார் சபாநாயகர். அப்போதே, காலையில் தீர்ப்பு கூறாவிட்டால், நிதி அமைச்சர் பதிலுரையை புறக்கணிப்போம் என தெரிவித்தோம்; அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், சட்டசபை துவங்கியதும் கேட்டதற்கு, பிறகு கூறுகிறேன் என தட்டிக் கழித்தார்; எனவே, அதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். இப்போது, நடவடிக்கை எடுக்க போவதாக கூறுகிறார்.அதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

சட்டசபை காங்., தலைவர் :

ராமசாமி: சட்டசபை ஜனநாயகத்தை காக்கும் வகையில், சபாநாயகர் செயல்பட வேண்டும்.

Advertisement

தற்போது நடப்பது நன்றாக இல்லை. நான், ஒரு மணிநேரம் பேசியதாக சபாநாயகர் கூறினார். ஆனால், 15 நிமிடம் பேசினேன். அமைச்சர்கள், 45 நிமிடம் குறுக்கிட்டு பேசினர். சபாநாயகர் போதிய வாய்ப்பு அளிப்பதில்லை.

முஸ்லிம் லீக் - முகமது அபுபக்கர்: அ.தி.மு.க., கூடுதலாக, ஒரு சதவீதம் ஓட்டு மட்டுமே பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்க்கட்சி யினர், 98 பேர் உள்ளோம். எனவே, எதிர்க்கட்சி கள் பேச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், சபாநாயகர் போதிய வாய்ப்பு அளிப்பதில்லை.

Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
30-ஜூலை-201620:52:07 IST Report Abuse

LAXநொள்ளக்கைகள் புடைசூழ, தொளபதியின் சட்டசபை வெளிநடப்பைப் பார்க்கும் போதெல்லாம், 'என்ன நடந்தாலும் க்ரௌவ்ட எங்கிட்ட அண்ட விடாதீங்க..' என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது..

Rate this:
LAX - Trichy,இந்தியா
30-ஜூலை-201620:48:17 IST Report Abuse

LAXபரீட்சை அட்டை பரந்தாமன் (சட்டசபை விசிட்டின் போது எப்போதும் கையில் ஒரு பரீட்சை அட்டை) = சுடாலின் = தொளபதி.. - ஹ.. ஹா..

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
31-ஜூலை-201606:10:43 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஅங்கே என்னவோ பொது கூட்டம் பேசுனா கூட செய்தி வாசிக்கற மாதிரி தெரியுதே... ...

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
30-ஜூலை-201618:02:03 IST Report Abuse

Paranthamanசட்ட சபையில் அம்மா வை சபாநாயகர் எழுந்து நின்று கூழை கும்பிடு போடுவது சபைமரபே கிடையாது. பின் எப்படி எதிர் கட்சிகள் சபாநாயகரை மரியாதையாக கூப்பிடுவார்கள்.-சிங்கப்பூர் ரேயன் திமுக ஆட்சியில் முதல்வர் சட்ட சபைக்குள் நுழையும் போது சபாநாயகர் எழுந்து மரியாதை செய்வதில்லை அதை சரி என்று சொல்கிறீர்களா. சபாநாயகர் சட்ட சபைக்கு தலைவர், ஆனால் முதல்வர் ஆளும் கட்சி தலைவர். இது தெரியாமல் கருத்து சொல்லாதீர்கள்.

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X